அருள்மிகு அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி திருக்கோவில் (பட்டமங்கலம்)
God Name : சுந்தரேஸ்வரர், அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
ஸ்தல வரலாறு:
அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்
ஆகிய அஷ்டமா சித்திகளை சனகாதி முனிவர்களுக்கு போதித்துக் கொண்டிருந்தார்
சிவபெருமான். இதைக் கண்ணுற்ற அம்பா, துலா, நிகர்த்தனி, அப்ரகேந்தி, மேகேந்தி,
வர்ஷேந்தி எனும் ஆறு கார்த்திகைப் பெண்கள் தாங்களும் உபதேசம் பெற விரும்பினர்.
சரவணப் பொய்கையில் தீப்பொறியாக தோன்றிய ஆறு குழந்தைகளுக்கு பாலூட்டி
வளர்த்து ஆறுமுகனாக்கியவர்கள் இந்த கார்த்திகைப் பெண்கள்.
உமையன்னையிடம் பிரார்த்திக்குமாறு சிவனார் கூறியதை பொருட்படுத்தாது,
சிவபெருமானே நேரடியாக உபதேசம் செய்ய வேண்டும் என பிடிவாதம் செய்ததால்,
சிவனாரின் சாபத்தைப் பெற்று, கற்பாறைகளாக மாறி, சாப விமோசனம் பெற
பட்டமங்கலத்து ஆல மரத்தடியில் தவமிருந்தனர்.
ஆயிரம் வருடங்கள் கடந்த பிறகு குரு தட்சிணாமூர்த்தியாக இத்தலத்திற்கு வந்த
சிவபெருமான், இங்கு ஆலம்பழங்களால் மூடப்பட்டுக் கிடந்த கற்களின் அருகே
அமர்ந்தார். கற்கள் சுயரூபம் பெற்று, கார்த்திகை பெண்களாக வடிவம் கொண்டனர்.
சாப விமோசனத்தை அளித்த தாங்கள் அஷ்டமாசித்தி உபதேசமும் செய்ய வேண்டும்
என வேண்டினார்கள். அதன்படி சிவனாரும் உபதேசம் செய்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 33வது திருவிளையாடல் நிகழ்ந்த
ஸ்தலம் என்பர்.
சந்நிதியின் பின்புறமாக அனேக விழுதுகளுடன் அடர்ந்து வளர்ந்த புராதன
ஆலமரம் உள்ளது. இதைச் சுற்றிவர 15 நிமிடங்களாவது பிடிக்கும்.
குரு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக சுந்தரேஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.
அன்னை மீனாட்சி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
இரண்டு பிரகாரங்கள், அர்த்த மண்டபம், முக மண்டபம்,
நடராஜர் சபை ஆகியன உள்ளன. நவையடிக்காளியை தரிசிக்கலாம்.
அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி யோக வடிவம் தாங்கி ஆலமரத்தடியில் தனிக் கோவில்
கொண்டுள்ளார். வழக்கமாக எல்லாக் கோவில்களிலும் தென்திசை நோக்கி இருப்பவர்
இங்கு கிழக்கு பார்த்து எழுந்தருளியுள்ளார். வெள்ளிக் காப்பிலாகட்டும்,
விபூதி - சந்தனக் காப்பிலாகட்டும் பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும்
வசீகரமான தோற்றம் கொண்டுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.