அருள்மிகு ககோளபுரீஸ்வரர் திருக்கோயில் (திருக்கோளக்குடி)

God Name : பொய்யாமொழீசர், சிவதருமபுரீஸ்வரர், ககோளபுரீஸ்வரர்.

திருக்கழுக்குன்றம் கோவில்

தஞ்சாவூர்

Call : +91-

 ்

 ்

பூமி (மலையடிவாரம்) - அந்தரம் (மலைக்கோயில்) - ஸ்வர்க்கம் (உச்சிக்கோயில்) என மூன்று நிலைகளில் காணப்படும் கோயில். (பூமி) மலையடிவாரக் கோயில்: மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் பொய்யாமொழீசர். விநாயகரின் சந்நிதிக்கு மேற்கே தனி சந்நிதி கொண்டு சிலா வடிவில் எழுந்தருளியுள்ளார் அம்பாள் மரகதவல்லி. கோயிலின் தெற்கே உள்ள படிகளின் எதிரே திருப்பாறை இருக்கின்றது. பக்தர்களின் முறையீடுகளுக்கு தீர்ப்பு வழங்கும் தெய்வீகப் பாறை என்பர். (அந்தரம்) மலைக்கோயில்: மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சிவதருமபுரீஸ்வரர். சுயம்பு லிங்க மூர்த்தம். கிழக்கு முகமாய் எழுந்தருளியுள்ளார். தனி விமானம் கொண்டு சிவகாமவல்லி அன்னை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். தவளம் படாச்சுனை - தவளம் என்றால் ஒளி. இதன் மேற்பரப்பிலுள்ள பாறைகளில் தேனீக்களின் கூடுகள் நிறைய தொங்கிக் கொண்டுள்ளன. எத்தனை முறை கலைத்தாலும் மீண்டும் அதே இடத்தில் கூடு கட்டும் தேனீக்களை சப்த கன்னியர்கள் எனக் கூறுகின்றனர். இந்த சுனைக்கு வடக்கே உள்ள படிக்கட்டுகள் வழியே சென்றால் ஸ்வர்க்கம் பகுதியிலுள்ள கோயிலை அடையலாம். (ஸ்வர்க்கம்) மலையுச்சிக் கோயில்: மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ககோளபுரீஸ்வரர். மிகப் பெரிய பாணமும் மிகப் பெரிய ஆவுடையும் கொண்டுள்ளார். அம்பாள் ஆத்மநாயகி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். இது ஒரு குடைவரைக் கோயில். மூலஸ்தானம், நந்தி, மூலவர் அனைத்தும் பாறையிலேயே குடைந்து செதுக்கப்பட்டு உருவாக்கியுள்ளனர். மலையுச்சியில் சுப்ரமண்யஸ்வாமி தனிக்கோயில் கொண்டுள்ளார். ஆறு திருமுகங்களும், பன்னிரு கரங்களும் கொண்ட அழகான திருவுருவம். வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். சரிவான பாறை என்பதால் இரும்பு குழாய்கள் பொருத்தியுள்ளனர். அதைப் பிடித்துக் கொண்டு ஏற வேண்டும். உருண்டை வடிவமான பாறைகளை கோளக்குன்றுகள் என்பார்கள். எண்ணற்ற கோளக்குன்றுகளை தாங்கியுள்ள மலை என்பதால் திருக்கோளக்குடி எனப் பெயருற்றது. பலாப்பழங்களை குவித்து வைத்தாற் போல் காட்சியளிக்கின்றது. 1500 அடி உயர மலை.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.