அருள்மிகு அரைக்காசு அம்மன் திருக்கோவில், ரத்னமங்கலம்

God Name : -

அவினாசியப்பர் கோவில்

காஞ்சிபுரம்

Call : +91-

புதுக்கோட்டை சமஸ்தானத்து மன்னர்களின் குலதெய்வமான ப்ரஹந்நாயகி, அங்கு எப்படி தோற்றம் அளிக்கின்றாளோ, அது போலவே இங்கும் காட்சி தருகின்றாள். இந்த அம்மனின் திருவுருவத்தை 1738ஆம் ஆண்டு நாணயங்களில் அச்சிட்டனர் புதுக்கோட்டை மன்னர்கள். இதுவே அரைக்காசு அம்மன் என வழங்கலாயிற்று. குபேரன் ஆலயத்திற்கு திருமண வைபவம் காண வந்த ஒருவர், தனது மஹாலட்சுமி டாலர் பதித்த தங்க செயின் எங்கோ காணாமல் போனதால் வருத்தமுற்றார். அது திரும்ப கிடைக்கப் பெற்றால், அரைக்காசு அம்மனுக்கு ஆலயம் எழுப்புவதாக பிரார்த்தனை செய்து கொண்டார். மறு நாள் கூட்டிய குப்பையிலிருந்து செயின் கிடைத்ததாம். வேண்டிக் கொண்டபடி இந்த ஆலயத்தை கட்டி தந்தார் என அர்ச்சகர் கூறினார். பொதுவாக ஏதாவது பொருள் தொலைந்து போனால், அரைக்காசு அம்மனுக்கு வேண்டிக் கொள்வார்கள். பொருள் திரும்ப கிடைத்ததும் வெல்ல நைவேத்தியம் செய்வார்கள்.
விநாயகரை வணங்கி ஆசி பெற்று, காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பண்ணசாமியை வழிபட்டு ஆலயசுற்றைத் தொடங்குகின்றனர். மூலஸ்தானத்தில், மூலவராக அரைக்காசு அம்மன் எனப் போற்றப்படும் ப்ரஹந்நாயகி கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறாள். அழகு திருவுருவமாக காட்சி தரும் இவள் மிகவும் சக்தி வாய்ந்தவள். சந்தனம் மற்றும் மலர் அலங்காரங்கள் செய்து மகிழ்கின்றனர். எதிரே ப்ரஸன்ன பலகை வைத்துள்ளனர். மதுரை மீனாட்சி உட்பட 106 அம்மன்கள் சுற்றிலும் காட்சி தருகின்றனர். பின்னர் மஹாமேருவை தரிசிக்கலாம். சரஸ்வதி, மஹாலட்சுமி, காளி ஆகிய தேவியர்களையும் தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.