அருள்மிகு சேவுகப் பெருமான் அய்யனார் திருக்கோவில் (சிங்கம்புணரி)

God Name : சேவுகப் பெருமான் அய்யனார் மற்றும் சுயம்பிரகாசேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தஞ்சாவூர்

Call : +91-

சிம்ம வாஹினியாக சக்தி கோவில் கொண்டுள்ள ஸ்தலம் என்பதால் சிங்கம் - பிடாரி என்றழைக்கப்பட்டு பின்னர் மருவி சிங்கம்புணரி என்றானதாக கூறப்படுகிறது. ஆதியில் அடர்ந்த காடுகள் இருந்த பகுதியாக விளங்கியதாலும், சிங்கங்கள் மிகுந்திருந்ததாலும் இவ்ஊருக்கு சிங்கம்புணரி எனப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. சங்ககாலத்தில் பாரி வள்ளலின் புறம்பு நாட்டு ஊர்களில் ஒன்றாக இருந்தது. பாரிவேட்டை, புரவியெடுப்பு, கழுவன் திருவிழா ஆகியவற்றை மரபுகளாக கொண்டிருந்த ஊர். சமணர்களை கழுவேற்றிய நிகழ்ச்சியை கழுவன் திருவிழா என்பார்கள். ஐந்து நிலை நாடுகளின் உட்பிரிவாக ஐந்து மங்கலங்களாக பிரிக்கப்பட்டு பின் அஞ்சுமங்கலம் என அழைக்கப்பட்டு இப்போது அஞ்சல்நாடு எனப்படுகிறது. தென்னைமட்டை நாரைக் கொண்டு கொச்சைக்கயிறு தயாரிக்கும் தொழில், பிரதானமாக நடைபெறும் ஊராக விளங்குகிறது. கோவில் மாடுகள் பிரசித்தம்.
வாசலில் இரண்டு பெரிய சேமக் குதிரைகள் நிற்கின்றன. உள்ளேயும் இரண்டு சேமக் குதிரைகளைக் காணலாம். மூன்று கருவறைகள் உள்ள ஆலயம். நடுவே உள்ள கருவறையில் சேவுகப் பெருமான் அய்யனார் எழுந்தருளி அருள் புரிகின்றார். இடது காலை சற்று தூக்கிய நிலையில், இடது கையை இடது முழங்கால் மீது வைத்து அமர்ந்த கோலம். வலக்கையில் செண்டாயுதம் வைத்துள்ளார். தலையில் மகுடமும், சூரிய கலை - சந்திர கலையும் தரித்துள்ளார். மீசை இல்லாமல் சாந்தமான திருமுகம். யோகப்பட்டை பளிச்சிடுகிறது. மிகுந்த வரப்பிரசாதி என்பர். இவரை தர்மசாஸ்தா, மஹாசாஸ்தா என்றெல்லாம் அழைக்கின்றனர். பூரணா - புஷ்களா தேவியர்கள் உடன் அமர்ந்துள்ளனர். இடப்புறமாக உள்ள மற்றொரு கருவறையில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சுயம்பிரகாசேஸ்வரர் எனப்படும் தான்தோன்றீஸ்வரர். வலப்புறமாக உள்ள கருவறையில் பூரணா புஷ்களா சமேத அடைக்கலம் காத்த அய்யனார் எழுந்தருளியுள்ளார். கன்னி மூலையில் விநாயகப் பெருமானும், பிரகாரத்தில் வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமானும் தரிசனம் தருகின்றனர். எதிரேயுள்ள சந்நிதியில் கருப்பண்ணஸ்வாமி ஆயுதபாணியாக எழுந்தருளியுள்ளார். வடக்கு பார்த்த சந்நிதி. தெற்கேயுள்ள சந்நிதியில் சிம்மவாஹினியான பிடாரி அஷ்டபுஜங்களுடன் கம்பீரமாக காட்சி தருகின்றார். கரைய கருப்பர், சப்தமாதர்கள், சங்கிலி கருப்பர், சன்னாசி போன்ற பரிவார தெய்வங்களை காணலாம். யானை - குதிரை மற்றும் பூதகணங்கள் யாவும் நுழைவாசலில் நிற்கின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.