அருள்மிகு சஹஸ்ரலக்ஷ்மீஸ்வரர் திருக்கோவில் (தீயத்தூர்)
God Name : சஹஸ்ரலக்ஷ்மீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
ஆயிரம் மலர்கள் கொண்டு லட்சுமி பூஜித்ததால் லட்சுமிபுரீஸ்வரர் என்றும், சூரியன் தனது ஆயிரம் கிரணங்களால் பூஜித்ததால் சஹஸ்ரரஸ்மிபுரீஸ்வரர் (ரஸ்மி என்றால் கிரணங்கள்) என்றும் திருநாமம் கொண்டார் எனக் கூறுவர். ஸ்ரீ வாஞ்சா கணபதி தனது திருமணத்திற்காக சிவனிடம் அக்னி பெற்றதாக ஸ்தல வரலாறு. ஒவ்வொரு சஹஸ்ரநாம பீஜாக்ஷர வடிவையும் தமது சுயம்புலிங்கத் திருமேனியில் காண்பித்து அருளப்பட்ட கார்ஜனீய மகரிஷிக்கு மஹாலட்சுமி செய்யும் யாகத்திலிருந்து தோன்றிய சஹஸ்ரலக்ஷ்மீஸ்வரர், சஹஸ்ரரஸ்மி-புரீஸ்வரர் ஆகிய நாமாக்களின் உட்பொருளை விளக்கியதாக கூறப்படுகிறது. தட்ச யாகத்தில் கலந்து கொண்டதால் ஒளியிழந்த அக்னி இழந்த ஒளியை திரும்பப் பெறவும், ஐந்தாவது தலை கிள்ளப்பட்டதால் உண்டான ரணம் குணமடைய பிரம்மனும் இவ்விறைவனை வழிபட்டுள்ளனர். அக்னி (தீ) பிரம்மா (அயன்) இருவரும் வழிபட்டதால் (தீ-அயத்தூர்) தீயத்தூர் எனப் பெயர் கொண்டது. இத்தலம் உஷ்ண ரோகங்களை நீக்க வல்ல பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சஹஸ்ரலக்ஷ்மீஸ்வரர். சஹஸ்ரரஸ்மிபுரீஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. சுயம்பு லிங்கம். கிழக்கு பார்த்த சந்நிதி. அன்னை ப்ரஹந்நாயகி தெற்கு பார்த்த சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். பிரகார வலச் சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வயானை உடனாய முருகன், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சூரிய-சந்திரர்கள், நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். வாஞ்சா கணபதி தனி சந்நிதி கொண்டுள்ளார். வாஞ்சா கணபதி மற்றும் நந்தியெம்பெருமான் திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.