அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில் (கண்ணாரக்குடி)

God Name : தர்ம சாஸ்தா

திருக்கழுக்குன்றம் கோவில்

சிவகங்கை

Call : +91-

கார்குடி என்று முன்பு பெயர் கொண்டிருந்த இவ்வூரைச் சேர்ந்த கண்ணன் தனது நோய் தீர வேண்டி, தினமும் 10 கி.மீ. சென்று பேரையூர் சாஸ்தாவை வழிபட்டு வந்தான். முதுமையடைந்ததும் அவ்வளவு தூரம் போக முடியவில்லையே என வருந்திய கண்ணனைத் தேடி இவ்வூருக்கு வந்து தரிசனம் தந்தார் தர்மசாஸ்தா. இதனால் இவ்வூர் கண்ணங்காரக்குடி எனப் பெயருற்றது.
ஊரணி அருகே உள்ள பாலையடி விநாயகரை வணங்கி ஆசி பெற்று ஆலய சுற்று மேற்கொள்கின்றனர். மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளி அருள் பாலிக்கும் தர்ம சாஸ்தா மிகுந்த வரப்ரசாதி. இவரை செண்டாயுதன், பூதநாதன் என்று போற்றுகின்றனர். உற்சவ மூர்த்தங்கள் பேரெழில் கொண்டு விளங்குகின்றன. பூரணி - புஷ்கலை தேவியர்கள் உடன் உள்ளனர். பிரகார வலச்சுற்றில், நாகர்கள், பைரவர், அகோர வீரபத்ரர், பணி வீரப்பன், பத்ரகாளி, பொற்பனை முனீஸ்வரன், மூலிகை மலையானடி முருகன், அடைக்கலம் காத்தார், காட்டேரி, வடக்கு வாசல் கருப்பு, அழகிய நாச்சி ஆகிய பரிவார தேவதைகளைக் காணலாம். சாஸ்தாவுடன் அரூபமாக வந்த பூதகணங்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் பிரம்மாண்டமான உருவச்சிலைகளை உருவாக்கிய விஜயன் சேதுபதி என்பவன் அவற்றை கோயில் வாசலில் வைத்துள்ளான்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.