அருள்மிகு சத்யகிரீஸ்வரர் திருக் கோயில் (திருமெய்யம்)
God Name : சத்யகிரீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
சந்திரன் தனக்கு ஏற்பட்ட நோயிலிருந்து குணம் பெறுவதற்காக க்ஷேத்ராடனம் மேற்கொண்டு, இவ்வூருக்கு வந்து, சத்யகிரீஸ்வரரை வழிபட்டு நோயிலிருந்து விடுபட்டான் என ஸ்தல வரலாறு. வீரபாண்டிய கட்டபொம்மனும், ஊமைத்துரையும் இங்குள்ள கோட்டையில்தான் சிறிது காலம் ஒளிந்து கொண்டிருந்தனர் என்றும், தொண்டைமானால் காட்டிக் கொடுக்கப்பட்டு, பின் வெள்ளையர்களிடம் பிடிபட்டனர் என்று கூறப்படுகிறது. ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு வளையங்கள் கொண்டுள்ள கோட்டை. பெருமாள் கோயில் - சிவாலயம் இரண்டிற்கும் ஒரே சுற்று சுவர் அமைந்திருப்பது ஆதியில் கடைபிடிக்கப்பட்ட சைவ - வைணவ ஒற்றுமையை விளக்குகிறது.
முதல் மண்டபத்தில் பானு உமாபதிசுவரர் கிழக்கு நோக்கி சந்நிதி கொண்டுள்ளார். ராஜ ராஜேஸ்வரி அம்மன் தெற்கு பார்த்து எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். பைரவர் மற்றும் சிவாலய பரிவார தேவதைகள் இடம் பெற்றுள்ளனர். இதைக் கீழைக் கோயில் என்பார்கள். சற்று மேலே வேணுவனேஸ்வரி அம்மன் சந்நிதி கொண்டுள்ளார். மிகுந்த வரப்பிரசாதி. அதற்கும் சற்று மேலே சத்யகிரீஸ்வரரின் குகைக் கோயில் இருக்கின்றது. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சத்யகிரீஸ்வரர். வட்ட வடிவமான யோனி பீடத்தின் மீது நிற்கும் அழகிய லிங்கம். இந்த சந்நிதியே பாறையில் குடையப்பட்டது. நந்தியும் இவற்றோடு ஒரே கல்லில் குடையப்பட்டிருக்கிறது. வலம்புரி விநாயகரையும் வணங்கி ஆசி பெறலாம். சுவர்களிலும் தளத்திலும் அரிய பல சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள தூண்கள் கீழ்மேல் பகுதியில் உருளையாகவும் நடுவில் எட்டுப்பட்டை கொண்டும் காணப்படுகின்றன. குடைவரைக் கோயில் என்பதால் பிரகாரங்கள் இல்லை. பல்லவர் காலத்திய குடைவரைக் கோயில். பரிவாதினி எனப்படும் யாழை மீட்டி இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளார் மகேந்திரவர்மன். இதைக் குறிக்கும் வகையில் சங்கீத வியாச சிற்பம் காணப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.