அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவில் (பேரையூர்)

God Name : ஸ்ரீ நாகநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

சிவகங்கை

Call : +91-

மூலவர்: ஸ்ரீ நாகநாதர், அம்பாள்: ஸ்ரீ பிரஹந்நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ நாகநாதர். சுயம்பு லிங்க மூர்த்தம். ஆதிசேஷன் வழிபட்டதால் இறைவனுக்கு நாகநாதர் என்ற பெயர் வழங்கலாயிற்று. ஸ்ரீ பிரஹந்நாயகி அன்னை தனி சந்நிதி கொண்டுள்ளார். கோஷ்ட மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றனர். உட்பிரகாரத்தில் பொய்யாத விநாயகர், நடராஜர், முருகப் பெருமான், தட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். ஸ்ரீ நாகர் தனி சந்நிதியில் எழுந்தருளி அருள் புரிகின்றார். இவருக்கு அபிஷேகம் செய்யும்போது திருநாகேஸ்வரம் போல் இவரது திருமேனியில் விழும் பால் நீல நிறமாக மாறி வழிகிறது. சுவாமி சந்நிதிக்கு எதிராக இயற்கையாக அமைந்த சுனையையும் அதையொட்டிய தீர்த்தக்குளத்தையும் காணலாம். இதில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும். சுனையின் நீர்மட்டம் குறையும்போது பக்க சுவரில் திரிசூலக்குறி தென்படும். காற்று வீசும்போது இந்த தீர்த்தக்குளத்து தண்ணீர் அலைகள் போல் ஆர்ப்பரிக்கின்றன. நாகராஜனும் நாக கன்னிகையும் இந்த சுனையிலிருந்து இறைவனை வழிபட்டதாக ஐதீகம். பங்குனி மாத மீன லக்னத்தில் சுனையிலிருந்து ஆர்ப்பரிக்கும் ஒலி பேரையின் அதாவது மிருதங்கத்தின் ஒலியைப் போலக் கேட்பதால் இவ்வூர் பேரையூர் எனப் பெயர் கொண்டது. இக்குளத்து சுற்றுச்சுவர் முழுவதும் வரிசையாக நாகப்பிரதிஷ்டைகள் அமைத்துள்ளனர். கோஷ்டங்கள், மதிற்சுவர்கள், மாடங்கள், பிறைகள் என எங்குப் பார்த்தாலும் நாகப் பிரதிஷ்டைகளைக் காணலாம். சூரியன் நடுவிலிருக்க சுற்றிலும் மற்ற கிரகங்கள் இருப்பது வித்தியாசமானது. சூரியனைப் பார்த்தவாறு மற்ற கிரகங்கள் உள்ளன. ஜோதிட சாஸ்திரத்தில் தெரிவித்துள்ளபடி மூலத்திரிகோண அமைப்பில் உள்ளதாக அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.