அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில்
God Name : பாலதண்டாயுதபாணி
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
85 வயதைக் கடந்த சுப்ரமண்ய வழுவடியார் எனும் ஜமீன்தார் பழநிக்குச் சென்று பழநியாண்டவரை வழிபடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். வயது முதிர்ச்சி அல்லது உடல் அசதி காரணமாக பழனிக்குச் செல்ல முடியாமல் போய்விடுமோ என அஞ்சினார். ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய பழநியாண்டவர், 'உன்னைத் தேடி நானே வருவேன்... வீண் கவலை வேண்டாம்' எனக் கூறினாராம். மறு நாளே புதியவர் ஒருவர் இவரது இல்லம் தேடி வந்து, 'பழனியிலிருந்து சிலை கொண்டு வந்துள்ளேன்' எனக் கூறி சிலையை வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். ஊர் மக்களின் ஒத்துழைப்போடு இந்த சிலையை பிரதிஷ்டை செய்து இக்கோவிலை சுப்ரமண்ய வழுவடியார் எழுப்பினார் எனக் குறிப்பொன்று கூறுகிறது.
200 அடி உயரமுள்ள குன்றின் மீது இக்கோவில் பழநியில் இருப்பதைப் போன்றே உருவாக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள பாலதண்டாயுதபாணி பார்க்க பரவசமூட்டும் அழகிய திருமேனி கொண்டு காட்சி தருகின்றார். பழநி முருகனைப் போலவே ஒரே அச்சில் வார்த்த திருவுருவம் எனக் கூறலாம். இவரை 'தென்பழநி ஆண்டவர்' என்று போற்றுகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.