அருள்மிகு முனீஸ்வரர் திருக்கோவில் (பொற்பனைக் கோட்டை)
God Name : முனீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
சிவகணங்களுள் ஒருவனான புஷ்பதந்தன், சிவபெருமானுக்கு குடை பிடிக்கும் பணியில் மஞ்சுவானி எனும் கந்தர்வ மங்கையைக் கண்டு மயங்கி, தனது பணியை மறந்து நின்றான். இதனால் சாபம் கொண்டு பூமியில் பொற்பனை மரமாக நின்றான். நிம்பு, ஆத்தி, பொற்பனை, மண்டபம் என யுகத்திற்கு ஒன்றாக மாறி மாறி நான்கு யுகங்கள் சாபத்தில் கழித்த புஷ்பதந்தன் பின்னர் இறைவனருளால் சாபவிமோசனம் பெற்றான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. தினமும் ஒரு தங்க பனம்பழம் காய்க்கும் இந்த அதிசய மரத்தின் பழம் தங்கம் என்று அறியாத வேடர்கள் அதை கலசமங்கல வணிகரிடம் விற்று காசாக்கி வந்தனர். இவ்வாறு 100 பழங்கள் விற்கப்பட்டன. இப்பகுதியை ஆண்ட அரசன் தனது நோய் தீர வேண்டி இறைவனை பிரார்த்தித்தான். பொற்பனை அருகே உள்ள குளத்தில் குளித்தால் நோய் நீங்கப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படியே செய்து நோய் நீங்கப் பெற்ற அரசன் பொற்பனையின் மகிமையை கேட்டறிந்தான். வணிகனிடம் சென்று 99 பொற்பனம்பழங்களை திரும்பப் பெற்றான். அங்கே ஒரு ஆலயத்தை நிறுவினான். வடக்கில் பொற்பனைக் காளியையும், தெற்கில் ஐயனாரையும், கிழக்கில் முனீஸ்வரரையும் ஸ்தாபனம் செய்தான் என ஸ்தல வரலாறு.
கிராமத்தின் கிழக்கு எல்லையில் ஆலயம் அமைந்துள்ளது. ஆலய முகப்பில் நிறைய வேல்கம்புகளும் சூலங்களும் நடப்பட்டுள்ளன. பிரதான கருவறையில் முனீஸ்வரர் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். இவர் மிகவும் சக்தி வாய்ந்த எல்லைக் காவல் தெய்வம். புதுக்கோட்டையில் பிறந்த எவரும், ஒரு முறையாவது இவரது சந்நிதிக்கு வராமல் இருந்திருக்க மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. இவரைச் சுற்றியுள்ள திறந்தவெளிப் பிரகாரத்தில் பிள்ளையார், பதினெட்டாம்படி கருப்பர், பொற்பனைக் காளி, முத்தாள் ராவுத்தர் ஆகிய தெய்வங்கள் உள்ளனர். நகரத்தை முனீஸ்வரர் பாதுகாக்கின்றார். வீடுகளில் இவர் வந்து செல்ல வசதியாக சிறு இடைவெளி அல்லது ஜன்னல் வைத்திருப்பார்கள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.