அருள்மிகு கோகர்ணேஸ்வரர் திருக்கோவில் (திருக்கோகர்ணம்)
God Name : கோகர்ணேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
தேவேந்திரனின் சபை கூடி, இந்திராதி தேவர்கள் காத்திருக்கும்படியாக, வெகு தாமதமாக சபைக்கு வந்த காமதேனு பசுவை சபித்து விடுகிறான் தேவேந்திரன். கொண்ட சாபப்படி, சாதாரணப் பசுவாக பூலோகம் வந்து, இங்குள்ள வகுளாரண்யத்தில் சிவபூஜை செய்து வந்தது. மங்கண மகரிஷியின் யோசனைப்படி தனது காதுகளில் தினமும் கங்கையை எடுத்துக் கொண்டு வந்து பார்வதி - பரமேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வந்தது.
தன் கன்று பசி தாங்காமல் தவித்ததைக் கண்ட பார்வதி தேவியார், பசுவிற்கு அருள் புரிய வேண்டினார்.
ஒரு புலி வடிவம் கொண்ட சிவபெருமான், பசு வரும் வழியில் காத்திருந்து அதன் மேல் பாய்ந்தார். தான் செய்யும் நித்ய அபிஷேக ஆராதனைகளுக்கு இடைஞ்சல் செய்யாமல் தன்னை போக அனுமதித்தால் தான் சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து விட்டு, கன்றுக் குட்டிக்கு பசியாற்றிவிட்டு, திரும்பி வருவதாகவும், தன்னை நம்பி விடுவிக்கும்படியும் கெஞ்சியது பசு. புலியும் போக அனுமதித்தது.
அதன்படியே எல்லாவற்றையும் முடித்தவிட்டு, புலியிடம் வாக்களித்தபடி, புலி வழி மறித்த இடத்திற்கு சென்றது பசு. அங்கு புலி இருந்த இடத்தில் பார்வதி - பரமேஸ்வரர் ரிஷபாரூடராய் காட்சி தந்தனர். பசு காமதேனுவாக உருப்பெற்று விமோசனம் அடைந்தது என ஸ்தல வரலாறு.
பசுவின் காதிலுள்ள கங்கை நீரால் பூஜிக்கப்பட்டதால் இறைவனுக்கு கோகர்ணேஸ்வரர் எனும் திருநாமம். கோ என்றால் பசு - கர்ணம் என்றால் காது. இதுவே காமதேனு வழிபட்ட ஸ்தலம்.
மலை மேல் உள்ள தீர்த்தம் காமதேனு தனது கொம்புகளால் உண்டாக்கியது. இதை கங்கா தீர்த்தம் என்பர்.
தனது ஆற்றல் அனைத்தையும் இழந்த பிரம்மன், இத்தலத்தில் தவமிருந்து மீண்டும் படைப்பாற்றலைப் பெற்றார். கபில முனிவர் மற்றும் சந்திர பகவான் லிங்கம் அமைத்து வழிபட்டுள்ளனர். இந்த லிங்கங்களை ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் வழிபட்டுள்ளனர்.
முழுமையான பாறையைக் கடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோவில். ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தது.
16ம் நூற்றாண்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தினரால் வெளியிடப்பட்டு புழக்கத்திலிருந்த அரைக்காசு அம்மன் நாணயம் இங்குள்ள பிரஹதாம்பாளின் திருவுருவம் எனக் கூறப்படுகிறது.
தொலைந்து போன பொருட்கள் கிடைக்கவும், தடைபட்ட காரியங்கள் நிறைவேறவும் சிறு துண்டு வெல்லத்தை (உருண்டை வெல்லம்) எடுத்து, வீட்டிலுள்ள அரைக்காசு அம்மன் படத்தின் முன்பாக வைத்து, நைவைத்யம் செய்ய வேண்டும். ஓம் ஸ்ரீ பிரஹதாம்பாள் தாயே என பிரார்த்திக்க வேண்டும். பின்னர் வெல்லத்தை தனியாக எடுத்து வைத்து விட வேண்டும். வேண்டியது நிறைவேறியதும் சேர்த்து வைத்திருந்து வெல்லக் கட்டிகளைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல் செய்து அனைவர்க்கும் விநியோகிக்கலாம். இவ்வூருக்கு வரும்போது ஒரு வெல்லக்கட்டியை அன்னையின் முன்பாக வைத்து நைவைத்யம் செய்ய வேண்டும்.
மூலவர்: கோகர்ணேஸ்வரர், அம்பாள்: பிரஹதாம்பாள்.
தேரடி விநாயகரை தரிசித்து ஆசி பெற்று வலச்சுற்றினை தொடங்கலாம். தொங்கும் கல்வளையங்கள் கொண்ட அனுப்ப மண்டபம் அழகாக இருக்கிறது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் கோகர்ணேஸ்வரர். உயரமான பாணம் கொண்டு கம்பீரமாக தரிசனம் தரும் அழகிய லிங்கம். ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யும்போது, காமதேனுப் பசு அதன் குளம்புகளால் ஏற்படுத்திய வடு, லிங்கத்தின் சிரசில் காணப்படுகிறது.
மற்றொரு கருவறையிலுள்ள வகுளேஸ்வரர் எனப்படும் மகிழவனேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை இருவரும் புராதன மூர்த்திகள் ஆவர். கிழக்கு பார்த்த சந்நிதி.
ஒரே கற்பாறையில், கர்ப்பக்ரஹம் - அர்த்த மண்டபம், தூண்கள் ஆகியன குடைந்துள்ளனர். தூண்கள் நடுவே எட்டுப்பட்டையோடும், கீழும் மேலும் கோள வடிவிலும் காணப்படுகின்றன. மலைச்சரிவின் கிழக்கே, செவ்வக வடிவ மண்டபம் ஒன்றை குடைந்து கருவறைச் சுவற்றுடன் புதைத்தபடி அமைத்துள்ளனர்.
சாந்த ஸ்வரூபம், எழில் வதனம், கருணைப் பொழியும் கண்கள், மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் தோற்றம் கொண்ட அம்பாள் பிரஹதாம்பாள் மிகுந்த வரப்பிரசாதி. கூந்தல் வரி, கிரீடம், மெல்லிய இடை, அதன் மேல் அங்கவஸ்திரம், ஆடை-ஆபரணங்கள் அணிந்து சர்வாலங்கார பூஷிதையாக காட்சி தருகின்றாள். சந்நிதியில் விளக்குடன் நிற்கும் பாவை விளக்கு விக்ரஹங்கள் அழகானவை. உற்சவ அம்பாள் தங்கத்தை சேர்த்து வார்க்கப்பட்ட விக்ரஹம் - மின்னும் அழகுடன் காணப்படுகிறாள்.
அரைக்காசு அம்மன் எனப் போற்றப்படும் அன்னை பிரஹதாம்பாளின் திருவுருவம் பொதிந்த நாணயங்கள் சமஸ்தானத்தால் வெளியிடப்பட்டவை. இந்த செப்புக் காசை வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும் மற்றும் தொலைந்து போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும் என ஐதீகம்.
அன்னை பிரஹதாம்பாளுக்கு நவராத்திரி தினங்களில் விசேஷ அலங்காரங்கள் செய்வார்கள். விஜயதசமி தினத்தன்று அம்பு போடும் நிகழ்ச்சி பார்க்க வேண்டிய ஒன்று என்பார்கள்.
இடப்புற சுவரில் காணப்படும் கணேசரின் சிற்பம் மிகவும் அழகாக இருக்கிறது. பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார் சதுர்புஜங்கள் கொண்ட அழகிய திருமேனி. உடைந்த தந்தம், அங்குசம், மோதகம் வைத்துள்ளார்.
வலப்புற சுவரில் ஆறடி உயரம் கொண்ட அழகிய திருமேனியுடன் திரிபங்கி நிலையில் நின்றபடி காட்சி தரும் கங்காதரர் யோக நிலையில் தரிசனம் தருகின்றார். கங்கையை தரித்துக் கொள்ள ஜடையை பிரித்து வைத்தது போல் இருக்கிறது. ஜடை சுருண்டு கிடக்கிறது. செஞ்சடையை இடது கரத்தினால் கோதியவாறு காணப்படுகிறார். அபூர்வமான வேலைப்பாடுகளை உடைய சிற்பம்.
சுவரில் மாட்டப்பட்டுள்ள படங்களில் நடராஜரின் ஆனந்த தாண்டவ வண்ண படம் மிகவும் அருமையானது.
அம்பாள் சந்நிதியை அடுத்துள்ள சந்நிதியில் காட்சி தரும் ஆறுமுகனின் எழில் வடிவம் மனதிலேயே நிற்கிறது. திரிபங்கி வடிவில் வள்ளி - தெய்வயானை தேவியர்களுடன் காட்சி தருகிறார் ஆறுமுகஸ்வாமி. மயிலின் செதிள்கள், தோகையிலுள்ள கண்கள் யாவும் இயல்பாக உள்ளன. பாம்பை கவ்வி நிற்கும் மயிலின் வாய் அழகுற அமைந்துள்ளது.
பொதுவாக கோஷ்டத்தில் இருந்து அருள் புரியும் தட்சிணாமூர்த்தி, இங்கு ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு அருகில் இருந்தபடி ஞானகாரகனாக அருள் பாலிப்பது கூடுதல் விசேஷம்.
தென்கிழக்கே பதினோரு அடி நீளத்திலும் இரண்டடி அகலத்திலும் சப்த மாத்ரிகளின் திருவுருவங்களை செதுக்கியுள்ளனர். வீரபத்ரர் மற்றும் கணேசரைக் காணலாம்.
மலை மேலுள்ள சுப்ரமண்யர் கோவிலில் ஸ்ரீ சரஸ்வதி - ஸ்ரீ லட்சுமி - ஸ்ரீதுர்க்கை ஆகிய மூன்று தேவியர்களும் சந்நிதி கொண்டுள்ளனர். மலையின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப பிரகாரங்களை அமைத்துள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.