அருள்மிகு வம்சவிருத்தீஸ்வரர் திருக்கோவில் (பெருங்காளூர்)

God Name : வம்சோதகர் எனப்படும் வம்சவிருத்தீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

சிவகங்கை

Call : +91-

மூன்றாம் குலோத்துங்க சோழன், புத்திர பாக்கியம் வேண்டி, ஸ்தல யாத்திரை மேற்கொண்டான். பயணத்தின்போது இங்கு தங்க நேரிட்டது. இங்குள்ள குளத்தில் நீராடினான். அப்போது குழவி போன்ற பொருள் ஒன்று அவனது கையில் தட்டுப்பட்டது. அதை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்தான். அது லிங்க வடிவம். லிங்க வடிவத்தைப் பார்த்ததும் சந்தோஷம் மேலிட, மன நிறைவு பெற்று, குளக்கரையிலேயே லிங்கப் பிரதிஷ்டை செய்து கோவிலெழுப்பி வழிபட்டு வந்தான். அடுத்த வருஷமே அவனது மனைவி அழகிய குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள். தனக்கு வரமளித்த இறைவனுக்கு வம்சவிருத்தீஸ்வரர் எனப் பெயர் சூட்டி தினமும் பூஜித்து வந்தான். புத்திர பாக்கியம் வேண்டி வருவோர்க்கு, வரமளிக்க இங்கேயே எழுந்தருளி அருள் புரிய வேண்டும் என பிரார்த்தித்தான். இவ்வூரிலுள்ள திருக்குளத்தில் நீராடி, வன்னிமர விநாயகரை வணங்கி, அங்கிருந்து தெற்கே 1 கி.மீ தூரத்திலுள்ள இடத்தில் ஆதிசேஷனையும், நவ கன்னிகைகளையும், கருப்பண்ணனையும் தரிசித்து பின்னர் வம்சோதகரை தரிசிக்க வேண்டும் என சிவாச்சாரியார் தெரிவிக்கின்றார். திட்டாணிக்கல்லில் விதைநெல்லைக் குவியலாக சமர்ப்பித்து, இறைவனிடமும் இறைவியிடமும் புத்திரபாக்கியம் நல்குமாறு பிரார்த்தனை செய்வோர் நலன் பெறுவர். மாவிளக்கு பிரார்த்தனை நேர்த்திக் கடனாக செய்கின்றனர்.
மூலவர்: வம்சவிருத்தீஸ்வரர், அம்பாள்: மங்கள நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் வம்சவிருத்தீஸ்வரர். உயரமான பாணம் கொண்டுள்ள அழகான திருமேனி. நாகாபரணம் சாத்தியுள்ளனர். திருநீற்றுப் பட்டை தரித்து, ருத்ராட்சமணிந்து தரிசனம் தருகின்றார். சுயம்பு லிங்க மூர்த்தம். மேற்கு பார்த்த சந்நிதி. கருவறையின் முன்பாக வைக்கப்பட்டுள்ள சதுரமான கல்லை 'திட்டாணிக்கல்' என்பார்கள். அதனை வணங்கிவிட்டு, பின்னர் மூலவரை தரிசனம் செய்துவிட்டு திரும்புகையில், திட்டாணிக்கல் மீது விதை நெல்லை குவியலாக சமர்ப்பித்து, குழந்தை வரம் கேட்டு பிரார்த்திக்கின்றனர். பிரகார வலச்சுற்றில் அன்னை மங்கள நாயகி தனி சந்நிதி கொண்டுள்ளார். சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருவுருவம். மங்களம் நல்கும் நாயகியாக இருக்கும் இவள் மிகுந்த வரப்பிரசாதி. தெற்கு பார்த்து சந்நிதி கொண்டுள்ளார். ஸ்தல விநாயகரான க்ஷேம கணபதி கருவறையின் பின்னேயுள்ள சந்நிதியில் கிழக்கு நோக்கியபடி எழுந்தருளி ஆசி வழங்குகின்றார். பெருங்களூரிலுள்ள அய்யனார் கோவிலில் - உருமநாதர், உருமநாச்சி, மலை நாட்டு அய்யனார், மலையாமருங்கர் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.