அருள்மிகு திருவேங்கைநாதர் திருக்கோவில் (திருவேங்கைவாசல்)
God Name : வியாக்ரபரீஸ்வரர் எனப்படும் வேங்கைநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
தேவேந்திரனின் சபை கூடி, இந்திராதி தேவர்கள் காத்திருக்கும்படியாக, வெகு தாமதமாக சபைக்கு வந்ததால் காமதேனுப் பசு சாபம் கொண்டு சாதாரணப் பசுவாக பூலோகம் வந்து, இங்குள்ள வகுளாரண்யத்தில் சிவபூஜை செய்து வந்தது. மங்கண மகரிஷியின் யோசனைப்படி தனது காதுகளில் தினமும் கங்கையை எடுத்துக் கொண்டு வந்து பார்வதி - பரமேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வந்தது. தான் குட்டி பசி தாங்காமல் தவித்ததைக் கண்ட பார்வதி தேவியார், பசுவிற்கு அருள் புரிய வேண்டினார். ஒரு புலி வடிவம் கொண்ட சிவபெருமான், பசு வரும் வழியில் காத்திருந்து அதன் மேல் பாய்ந்தார். தான் செய்யும் நித்ய அபிஷேக ஆராதனைகளுக்கு இடைஞ்சல் செய்யாமல் தன்னை போக அனுமதித்தால், தான் சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து விட்டு, கன்றுகுட்டிக்கு பசியாற்றிவிட்டு, திரும்பி வருவதாகவும், தன்னை நம்பி விடுவிக்கும்படியும் கெஞ்சியது பசு. புலியும் போக அனுமதித்தது. அதன்படியே எல்லாவற்றையும் முடித்தவிட்டு, புலியிடம் வாக்களித்தபடி, புலி வழி மறித்த இடத்திற்கு சென்றது பசு. அங்கு புலி இருந்த இடத்தில் பார்வதி - பரமேஸ்வரர் ரிஷபாரூடராய் காட்சி தந்தனர். பசு காமதேனுவாக உருப் பெற்று விமோசனம் அடைந்தது என ஸ்தல வரலாறு. பசுவின் காதிலுள்ள கங்கை நீரால் பூஜிக்கப்பட்டதால் இறைவனுக்கு கோகர்ணேஸ்வரர் எனும் திருநாமம். கோ என்றால் பசு - கர்ணம் என்றால் காது. கோகர்ணேஸ்வரர் கோவில் கொண்டிருப்பது புதுக்கோட்டையிலுள்ள திருக்கோகர்ணம் எனும் ஸ்தலம் ஆகும். இதுவே காமதேனு வழிபட்ட ஸ்தலம். சிவபெருமான் புலியாக வந்து வழிமறித்த ஸ்தலம் வேங்கை வாசல் எனப்படுகிறது. இதனால் இங்குள்ள இறைவன் வியாக்ரபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். கார்க்கோடகன் மற்றும் வாசுகி இருவரும் வேண்டிக் கொண்டதன்பேரில் சந்தியா நடனமான பிரதோஷ நடனத்தை இறைவன் ஆடிக் காண்பித்த ஸ்தலம். காமதேனுப் பசுவிற்கு சிவபெருமான் மோட்சம் அளித்த ஸ்தலம்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ள வியாக்ரபுரீஸ்வரர் எனப்படும் வேங்கைநாதர். இவருக்கு திருமேற்றளி சூடாமணி சதுர விடங்கன் என்றொரு திருநாமம் இருப்பதாக ராஜராஜேஸ்வரரின் சாஸனம் கூறுகின்றது. கருவறையின் ஒரு பக்கம் துவாரபாலகரும் மறு பக்கம் பால விநாயகரும் காணப்படுகின்றனர். அந்தராள மண்டபத்திற்கு வடக்கே உள்ள சந்நிதியில் அன்னை பிரகதாம்பாள் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் இரண்டு சந்நிதிகள் உண்டு. ஒன்று சந்திரக்காந்தக் கல்லிலும் மற்றொன்று சிலை செய்யும் கல்லிலும் அமைத்துள்ளனர். வலச்சுற்றில், கம்பீரமாக உத்குடிகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் யோக தட்சிணாமூர்த்தி ஸ்தலத்தின் சிறப்பு மூர்த்தம். ருத்ராட்சம், சர்ப்பம், அபய ஹஸ்தம் கொண்டு, யோக நிலையிலிருந்து கண் விழித்து, பத்தர்களுக்காக எழுந்து வருவது போன்ற தோற்றம் கொண்டுள்ளார். பேரெழிலுடன் காட்சி தரும் அழகிய திருவுருவம். ஒரு பாறையில் செதுக்கப்பட்டுள்ள கந்தக் கடவுள் வீராசன நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் ஞானமுருகனாக காட்சி தருகின்றார். இங்கு முதல் ஆராதனை கம்பத்தடி கருப்பருக்கே செய்கின்றனர். இவரே காவல் புரிவதாக ஐதீகம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.