அருள்மிகு பர்வதகிரீஸ்வரர் திருக்கோவில் (குன்றாண்டார் கோவில்)

God Name : பர்வதகிரீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

சிவகங்கை

Call : +91-

சங்கிலித்தொடராக அமைந்துள்ள அடுக்குத்தொடர் மலைப்பாறைகள். வடமேற்காக உள்ள இரண்டு பெரிய பாறைச் சரிவுகளிடையே தேங்கியுள்ள நீரோடை. அதன் கிழக்கே உள்ள குகைக்கோவில். மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட மூலஸ்தானத்தில் பர்வதகிரீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள்புரிகின்றார். மிகப் பெரிய பாணமும், நாகாபரணமும் கொண்டுள்ள அழகிய சிவலிங்க மூர்த்தம். வித்தியாசமாக நிற்கும் துவாரபாலகர்கள் - ஒருவர் இடது காலை உள்மடக்கியும், இடது கரத்துக் கதையை வலது கரத்தால் தொட்டபடியும் நிற்க, மற்றவரோ கைகளைக் கட்டியபடி நிற்கின்றார். இது புதுமையான படைப்பு. நந்தி மண்டபத்தருகே அம்பாள் உமையாம்பிகை சந்நிதி கொண்டுள்ளார். அம்பாளின் குங்கும பிரசாதம் மாங்கல்ய பாக்கியம் வழங்குவதாக ஐதீகம். செவ்வாய், வெள்ளி தினங்களில் பெண்களின் கூட்டம் அதிகம் காணப்படும். காணிக்கையாக மஞ்சள் செலுத்துகின்றனர். முன் மண்டபத்து சுவரில் வலம்புரி கணேசரும் உமா மகேஸ்வரரும் பாறையிலேயே செதுக்கப்பட்ட உருவங்களாகக் காட்சி தருகின்றனர். பிரகாரத்தின் தெற்கே உள்ள நிருத்த மண்டபத்து சிற்பங்கள் யாவும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டவைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது. விஜயநகர காலத்து வேலைப்பாடுகளைக் கொண்ட கல்யாண மண்டபம் ஒன்றும் இருக்கின்றது. வெளியே சாலையையொட்டி உள்ள நூற்றுக்கால் மண்டபம் தேரின் வடிவத்திலும், சங்கநிதி - பதுமநிதி போன்ற எட்டு பூதக்கணங்கள் மண்டபத்தூண்களைத் தாங்கும் பாவனையிலும், குதிரைகள் ரதத்தை இழுப்பது போன்றும் சிறந்த வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. உச்சியில் சுப்ரமண்யருக்கு ஒரு கோவில் இருப்பதால் இவ்வூர் குன்றாண்டார் கோவில் எனப் பெயர் கொண்டதாகக் கூறப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.