விஜயாலய சோளீஸ்வரம் (நார்த்தாமலை)

God Name : ஜ்வரஹரேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

சிவகங்கை

Call : +91-

மேலமலை, கடம்பர் மலை, உவச்சன் மலை, பாறையன் மலை, மண் மலை, பொன்மலை, ஆளுருட்டி மலை, பொம்மன் மலை ஆகிய எட்டு குன்றுகள், ஒன்றொடொன்று நெருங்கி இணைந்திருக்கும் மலைத்தொடரே நார்த்தமலைத் தொடர். இம்மலைக் குன்றுகளில் தளவா சுனை, ததும்பு சுனை, ஏழு சுனை, இரட்டை சுனை, மேலச்சுனை, அருண் சுனை, புலி குடிக்கும் சுனை, நவக்சுனை, மஞ்சள்சுனை ஆகிய சுனைகள் உள்ளன. ஆளுருட்டி மலை ஒரு நீண்ட கற்பாறை. ஆழமான சரிவும் கிடுகிடு பள்ளமும் கொண்டுள்ளது. குற்றங்கள் பல புரிந்தவரை, இதிலிருந்து உருட்டி விடுவது வழக்கமாம். நாரதர் மலை என்பதே மருவி நார்த்தாமலை என்றானதாக கூறப்படுகிறது. நகரத்தார் எனும் வணிகர்கள் இங்கு வசித்தபோது கோவில் நிர்வாகத்தை கவனித்துக்கொண்டிருந்தனர் என்றும் அவர்களின் பெயரால் நகரத்தார் மலை என அழைக்கப்பட்டு பின்னர் மருவி நார்த்தாமலை என்றானதாக கூறப்படுவதுண்டு. சஞ்சீவி மலையை ஹனுமன் எடுத்துச் சென்றபோது, அதனின்று பெயர்ந்து விழுந்த சிறு துண்டுகளே இந்த மலைக் குன்றுகள் என ஸ்தல வரலாறு. தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு தேவையான பாறாங்கற்களை நார்த்தாமலையிலிருந்து கொண்டு வரச் செய்தார் ராஜராஜ சோழன் என வரலாறு.
எட்டடி உயரம் கொண்ட மூலஸ்தானம் வெளியே சதுரமாகவும், உள்ளே வட்ட வடிவமாகவும் குடையப்பட்டு உருவாக்கி உள்ளனர். ஐந்தடி கனம் கொண்ட வட்டச்சுவரும், மேலே போகப் போக குறுகலாகவும் உள்ள விமானமும் கொண்டு காணப்படுகிறது. விமானத்தின் நான்கு மூலைகளிலும் அற்புதமான சிற்பங்கள் பல உள்ளன. அவற்றுள் முக்கியமான சிற்பங்களாக தட்சிணாமூர்த்தி மற்றும் சிவ - பார்வதியின் சிற்பங்களை சொல்லலாம். மேற்கு நோக்கிய வாசலைக் கொண்ட மூலஸ்தானத்தின் வாயிலில், இரண்டு பெரிய துவாரபாலகர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. ஆறு கற்றூண்கள் தாங்கி நிற்கும் அர்த்த மண்டபத்தில் பைரவர் மற்றும் துர்க்கை ஆகியோரின் திருவுருவங்களை சித்திரங்களாக வரைந்துள்ளனர். இதை மத்யக் கோவிலாகக் கொண்டு சுற்றிலும் கற்றளிகள் இருந்திருக்க வேண்டும் எனக் குறிப்பொன்று கூறுகிறது. சூரியன், சப்த மாதர்கள், கணபதி, சுப்ரமண்யர், ஜேஷ்டா தேவி, சண்டேசுவரர், சந்திரன் ஆகிய மூர்த்தங்கள் கொண்ட ஏழு கற்றளிகள். ததும்புசுனை எனப்படும் சுனை நீரில் மூழ்கியபடி காட்சி தரும் ஜ்வரஹரேஸ்வரர் எனும் லிங்க மூர்த்தம் தரிசிக்க சந்தோஷம் பெருகுகிறது. மங்களாம்பிகை உடனாய திருக்கடம்பூர் உடைய நாயனார் கோவில் கொண்டுள்ள கடம்பமலை அருகே உள்ளது. 13 அடி உயர கோட்டை சுவர் ஒன்று இரண்டாயிரம் அடி நீளத்திற்கு கடம்ப மலையை சுற்றி உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.