பழியிலிசுவரம் - சமணர் குடகு (நார்த்தாமலை)

God Name : விஷ்ணுவின் 12 வடிவங்கள்

திருக்கழுக்குன்றம் கோவில்

சிவகங்கை

Call : +91-

ஆதியில் ஜைனாலயமாக இருந்ததாக கூறப்படுகிறது. நாரதர் மலை என்பதே மருவி நார்த்தாமலை என்றானதாக கூறப்படுகிறது. நகரத்தார் எனும் வணிகர்கள் இங்கு வசித்தபோது கோவில் நிர்வாகத்தை கவனித்துக்கொண்டிருந்தனர் என்றும், அவர்களின் பெயரால் நகரத்தார் மலை என அழைக்கப்பட்டு பின்னர் மருவி நார்த்தாமலை என்றானதாக கூறப்படுவதுண்டு. சஞ்சீவி மலையை ஹனுமன் எடுத்துச் சென்றபோது, அதனின்று பெயர்ந்து விழுந்த சிறு துண்டுகளே இந்த மலைக் குன்றுகள் என ஸ்தல வரலாறு கூறுகிறது. அடிவாரத்தின் இடதுபறமாக தெரியும் சிறிய குன்றை படிக்கட்டுகள் ஏறி கடந்தால் ஹஸ்ரத் மஸ்தான் தர்காவை தரிசிக்கலாம்.
மேலமலை, கடம்பர் மலை, உவச்சன் மலை, பாறையன் மலை, மண் மலை, பொன்மலை, ஆளுருட்டி மலை, பொம்மன் மலை ஆகிய எட்டு குன்றுகள், ஒன்றொடொன்று நெருங்கி இணைந்திருக்கும் மலைத்தொடரே நார்த்தமலைத் தொடர். இம்மலைக் குன்றுகளில் தளவா சுனை, ததும்பு சுனை, ஏழு சுனை, இரட்டை சுனை, மேலச்சுனை, அருண் சுனை, புலி குடிக்கும் சுனை, நவச்சுனை, மஞ்சள்சுனை ஆகிய சுனைகள் உள்ளன. குகைகளை உள்ளடக்கிய மேலமலை சமணமலை எனப்படுகிறது. மேலமலையில் இரண்டு குடைவரைக் கோவில்கள் உள்ளன. அவை பழியிலிசுவரம், சமணர்குடகு என்பனவாகும். பழியிலிசுவரம்: எட்டடி நீளம், ஏழடி அகலம், ஆறேமுக்கால் அடி உயரம் கொண்ட குகை ஒன்றை கல்லிலே குடைந்து உருவாக்கிய குடைவரைக் கோவிலின் கீழே பூத கணங்களை செதுக்கியுள்ளனர். விடேல் விடுகு முத்தரையன் என்பவனின் மகனான சாத்தன் பழியிலி இதை குடைவித்ததால், அவனது பெயரிலேயே பழியிலிசுவரம் எனப்படுவதாக குறிப்பொன்று கூறுகிறது. சமணர் குடகு: பழியிலிசுவரத்தின் தெற்கே 50 அடி தொலைவில் சமணர் குடகு இருக்கின்றது. நான்கு தூண்கள் தாங்கி நிற்கும் அர்த்த மண்டபம் ஒன்றும், அதில் மஹாவிஷ்ணுவின் பன்னிரண்டு திருவுருவங்களும், அதையடுத்து மூலஸ்தானமும் குடையப்பட்டுள்ளன. மூலஸ்தானத்தில் மூலவர் காணப்படவில்லை. அர்த்த மண்டபத்தில் விஷ்ணுவின் 12 வடிவங்கள் காணப்படுகின்றன. குகையின் அடிப்புறத்தில் யானைகள் மற்றும் யாளிகளின் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.