அருள்மிகு கல்யாண ஆஞ்சநேயர் திருக்கோவில், தைலாவரம்
God Name : ஜெயவீர ஆஞ்சநேயர் (மூலவர்), கல்யாண ஆஞ்சநேயர் (உற்சவர்)
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
கலியுகத்தில் பிரம்ம பட்டத்தை ஏற்க வேண்டிய ஆஞ்சநேயர், சூரியனிடமிருந்து நவ வியாகரணங்களைக் கற்க வேண்டும். இதனால் சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் கிரகஸ்தனாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆதலால் சூரியனின் மகளான ஸ்வர்ச்சலாவை மணந்தார் என புராணக் குறிப்பொன்று கூறுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக ஜெயவீர ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். எட்டடி உயரம் கொண்ட அழகிய ஆஜானுபாகு திருமேனி. தோளிலுள்ள கதையை ஒரு கையால் பிடித்தும், மற்றொரு கையை இடுப்பில் வைத்தும் கம்பீரமாக நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். உற்சவரான கல்யாண ஆஞ்சநேயர் சங்கு-சக்கரம் மற்றும் அபய ஹஸ்தம் கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய அழகிய திருமேனியுடன் சேவை சாதிக்கின்றார். சதுர்புஜ சுபமங்கள வரத ஆஞ்சநேய ஸ்வாமி என்று போற்றுவர். ஸ்வர்ச்சலா தேவி உடன் உள்ளார். கண்டா ஸ்தம்பம் எனப்படும் 32 அடி உயர மணியை ராமர் சந்நிதியாக பாவிக்கின்றனர். மணியின் மேல் பகுதி 18 அடி - பகவத் கீதையை குறிப்பதாக உள்ளது. மணியின் உள் பகுதியிலுள்ள ராமர் கண்ணுக்குத் தெரிய மாட்டார். மணி மண்டபத் தூணிலுள்ள ராமர், சீதா, லட்சுமணர், ஹனுமன் ஆகியோரின் அழகு திருவுருவங்களை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.