அருள்மிகு ஷண்முகநாதர் திருக்கோவில் (விராலிமலை)

God Name : மூலவராக ஷண்முகநாதர், உற்சவர் - ஷண்முகர்

திருக்கழுக்குன்றம் கோவில்

சிவகங்கை

Call : +91-

சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய தீப்பொறிகள் விழுந்த தாமரை மலரில் உதித்த குழந்தை முருகனுக்கு பாலூட்ட மறுத்த தனது மனைவி அருந்ததியை வசிஷ்டர் சபித்து விட்டார். அருந்ததியை சபித்த வசிஷ்டரை முருகப் பெருமான் தண்டித்தார். வசிஷ்டர் - அருந்ததி இருவரும் விராலிமலைக்கு வந்து தவமிருந்து முருகனின் அனுக்ரஹத்தைப் பெற்றனர். பிரம்மனை தண்டித்த சிவபெருமானை நிந்தித்த நாரதர், பல துன்பங்களை சந்தித்து, சிவ அபராத செயலை போக்கிக் கொள்ள விராலிமலை வந்து வழிபட்டு பிராயச்சித்தம் தேடிக் கொண்டார். சூரபத்மனை மகனாக பெற்றதற்காக மனம் வருந்திய காச்யபர் விராலிமலை வந்து முருகனை வழிபட்டு மனசாந்தி பெற்றார். வரோதயன் எனும் சிறுவன் பள்ளிக்குப் போகாமல் விராலிமலைக்கு வந்து முருகனின் சிலைக்குப் பின்னால் ஒளிந்து கொள்வான். முருகனருளால் அவன் புலமை அடைந்து ஞானவரோதயன் ஆனான். பாளையக்காரர்களின் பிரதிநிதியான கருப்பமுத்து இத்தலம் வந்து வழிபட்டுக் கொண்டிருக்கும்போது இங்கு ஓடும் மாமுண்டி நதியின் வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்டான். உணவு ஏதும் கிடைக்கவில்லை. குளிரைப் போக்கிக் கொள்ள சுருட்டு பிடிக்காமல் இருக்க முடியாது என்ன செய்வது? எனப் புலம்பினான். அவன் முன் தோன்றிய முருகன் சுருட்டும் நெருப்புக்குச்சியும் கொடுத்தார். இதனால் இன்றளவும் முருகன் சந்நிதி முன்பாக சுருட்டு வைத்து நைவைத்யம் செய்வதாக கூறப்படுகிறது. குரா மரங்கள் வடிவில் முனிவர்கள் விரவியிருந்து முருகனை பூஜித்ததால் விராலிமலை எனப் பெயர் கொண்டதாக கூறுவர். விராலி எனும் மூலிகை செடிகள் மிகுந்து காணப்பட்டதால் விராலிமலை என்பாரும் உண்டு. சதிர் எனும் ஒரு வகை ஆட்டத்தை ஆடும் தேவதாசிகளை விறலியர்கள் என்பார்கள். அவர்கள் நிறைந்திருந்த ஊர் என்பதால் விராலிமலை ஆனதாக கூறுவோரும் உண்டு.
120 அடி உயரம் கொண்ட சிறிய மலைக்குன்று. பிரம்மாண்டமான பெரிய பாறை மீது அமைந்துள்ள கோவில். மலைக்கல்லிலேயே செதுக்கப்பட்டுள்ள 207 படிக்கட்டுகள் மீது ஏறிப் போக வேண்டும். மலையையும் மலைக்கோவிலையும் நெடுந்தூரத்திலிருந்தே பார்க்க முடியும். மலை முழுவதுமாக மயில்கள் ஆக்கிரமித்துள்ளன. அடிவாரத்தில் சரவணப் பொய்கை எனும் நாக தீர்த்தம் உள்ளது. படியேறும் இடத்தருகே எழுந்தருளியுள்ள வீரேஸ்வரரையும் தனிக் கோவிலில் மெய்க்கண்ணுடையாள் அம்மனையும் தரிசித்து ஆசி பெற்று, பின்னர் மலை ஏறுவது சம்பிரதாயம். இடையிடையே மண்டபங்கள் உள்ளன. நூறு (100) படிக்கட்டுகளைக் கடந்ததும் விநாயகர், இடும்பன், சுப்ரமண்யர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். இதனையடுத்து பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள சந்நிதிகளில் எழுந்தருளியுள்ள மீனாட்சி - சொக்கநாதரை தரிசிக்கலாம். மலை மீதுள்ள கோவிலின் மூலஸ்தானத்தில் மூலவராக ஷண்முகநாதர் எழுந்தருளி அருள் புரிகின்றார். ஆறு அழகிய திருமுகங்களையும் பன்னிரண்டு திருக்கரங்களையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். சூலமும் வஜ்ராயுதமும் தாங்கியுள்ளார். மூலவர் போன்றே உற்சவரும் அழகாக இருக்கின்றார். மயிலின் முகம் வலது பக்கம் திரும்பி உள்ளது. மூலஸ்தானத்தின் புறச்சுவர்களில் வசிஷ்டர், அருந்ததி, காச்யப முனிவர், நாரதர் ஆகியோரின் திருவுருவங்கள் காணப்படுகின்றன. ஷண்முக மூர்த்தி மண்டபத்தில் உற்சவ மூர்த்தியான ஷண்முகர், இரு தேவியர்களுடன் தரிசனம் தருகின்றார். காசி விசாலாட்சி உடனாய காசி விஸ்வநாதர் எழுந்தருளியுள்ளார். பிரகார வலச் சுற்றில் - பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, பைரவர், சிவகாமி உடனாய நடராஜர், வீரபாகு, மாணிக்க விநாயகர், ஸ்ரீ தேவி - பூ தேவி உடனாய ஸ்ரீநிவாசப் பெருமாள், அகஸ்தியர், அருணகிரிநாதர், க்ஷேத்ரபாலர் ஆகியோரை தரிசிக்கலாம். தாரகாரி எனும் முருகனின் வடிவத்தை இங்கு தரிசிக்கலாம். உச்சியிலுள்ள கணேசர் கோவிலருகே ஒரு கல்லால மரமும் புளியிரங்கு வாய்க்காலையும் காணலாம். வாய்க்காலை ஒட்டியுள்ள கருநெல்லிமரத்தடியில் பரஞ்சோதி முனிவர் தவமிருந்ததாக குறிப்பொன்று கூறுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.