அறிவர் கோவில் - சமணம் (சித்தன்னவாசல்)
God Name : பார்சுவநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
சித்தன்னவாசல் வண்ணச் சித்திரங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. மேலும் சமணர்களின் கற்படுக்கைகளும் தலையணைகளும் பிரசித்தி பெற்றவை. கல்லின் மேற்பரப்பைப் பொளிந்து, அதன் மேல் சுண்ணச் சாந்து பூசி, பின்னர் வெண் சுண்ணாம்புப் பூச்சு பூசி வழவழப்பாக்கி, சித்திரங்களின் ரேகைகளை முதலில் தீட்டிக் கொண்டு, பின் வண்ணச் சித்திரங்களைத் தீட்டுவார்கள். இதற்கு பிரெஸ்கோ செக்கோ (Fresco Secco) என்று பெயர். இந்த முறையைப் பின்பற்றி வரையப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்களைப் பற்றி மணிமேகலையில் போற்றப்பட்டுள்ளது. மேல் தளங்கள், தூண்கள், சுவர்கள், உத்தரங்கள் ஆகிய இடங்களில் பல அழகிய வண்ணச் சித்திரங்களைத் தீட்டியுள்ளனர். பெரும்பாலும் அழிந்தவை போக, மீதமுள்ளவற்றை நாம் கண்டு களிக்கலாம். இவை ஒன்பதாம் நூற்றாண்டின் படைப்புகள் என்பர். சித்துப்போசில் இளையர் என்பவரால் உருவாக்கப்பட்டதால், சித்தன்னவாசல் என்ற பெயரைக் கொண்டுள்ளது. சித் - அண்ணல் - வாயில் என்பதன் திரிபே சித்தன்னவாசல் என்பார்கள். இங்குள்ள சமணர் குகைகள் மற்றும் வண்ண ஓவியங்களைப் பார்க்க காலை நேரத்தில் மட்டும் அனுமதி தருகின்றனர். மாத்ருபூதேஸ்வரர் கோவில், கோவிந்தராஜப் பெருமாள் கோவில், பிடாரி அம்மன் கோவில் ஆகிய கோவில்களும் இருக்கின்றன.
மலையுச்சியின் நடுப்பகுதிக்கு ஏழடிப்பட்டம் என்று பெயர். இங்கு ஒரு குகை இயற்கையாக அமைந்துள்ளது. பாறையில் செதுக்கப்பட்டுள்ள ஏழு படிகள் வழியே குகைக்குள் போகலாம். சுற்றிலும் சங்கிலியால் வேலி அமைத்துள்ளனர். தரையில் பதினேழு கற்படுக்கைகள், தலையணைகள் செதுக்கியுள்ளனர். சமணர்களின் பிரார்த்தனை கூடமாக இருந்ததாம். வழுவழுப்பான கற்படுக்கைகள் காணப்படுகின்றன. மத்திய பாறையின் மேற்பகுதிக்குச் சென்றால் ஒரு குடைவரைக் குகைக் கோவிலைக் காணலாம். ஏழரை அடி உயரமும் பத்தடி சதுரமும் கொண்ட சிறிய கருவறை உள்ளது. குகைக்குள் இருக்கும் மண்டபத்திலுள்ள தேவ கோட்டத்தில் யோகாசன நிலையில் வீற்றிருக்கும் அழகிய பார்சுவநாதரின் சிற்பம் அரிய வேலைப்பாடுகளுடன் கூடியது. ஐந்து தலை நாகம் குடை பிடிக்கிறது. உட்சுவரின் மத்தியில் மூன்று அரைச் சிற்ப சிலைகள் உள்ளன. அவற்றுள் இரண்டு தீர்த்தங்கரர்களையும் மற்றொன்று ஆச்சாரியரையும் குறிக்கும். கர்ப்பகிரகத்திலுள்ள மூன்று சிற்பங்களுக்கு மேலுள்ள விதானத்தில் வரையப்பட்டுள்ள ரத்ன கம்பளமும் அதன் பக்கத்திலுள்ள உருவங்களும் போற்றத்தக்கவை. ஒன்பதடி நீளமும் மூன்றடி அகலமும் கொண்ட ரத்ன கம்பளம். தரையில் விரித்திருப்பதைப் போல விதானக் கூரையில் விரித்துள்ளனர். அர்த்த மண்டபத்தின் மேல் விதானச் சிற்பம் மிக மிக அற்புதமானது. தலையை அண்ணாந்து பார்த்தால் பிரம்மித்து நிற்போம். தாமரையும் அல்லியும் நிறைந்த ஒரு தடாகம். நீல நிற நீரில் துள்ளிக் குதிக்கும் மீன்கள் உள்ளன. யானைகளும் மாடுகளும் நீராடிக் கொண்டிருக்கின்றன. ஒரு ஜைனர் யானை மீது வலம் வருகிறார். மூன்று பவ்யர்கள் மலர்களைக் கொய்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் வடிவங்கள், தலைமுடி, உடலின் நிறம் ஆகியவை தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. தூண்களிலுள்ள நாட்டியக் கன்னிகைகள், அவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்கள் ஆகியவற்றைச் சித்தரிக்கும் சித்திரங்கள் உயிரோவியங்களாக உள்ளன. ஏழடிப்பட்டத்தின் கீழே நவச்சுனை எனும் தீர்த்தமும், அதனுள் மூழ்கியபடி ஒரு சந்நிதியும் இருக்கின்றன. அந்த சந்நிதியில் ஒரு லிங்கமும், சுற்றி வர ஒரு நடையும் உள்ளன. தண்ணீரை இறைத்துவிட்டு சுவாமியை வழிபடுகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.