அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்மஸ்வாமி திருக்கோவில் (நங்கவள்ளி)

God Name : ஸ்ரீ லட்சுமி நரசிம்மஸ்வாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

அஹோபிலத்திலிருந்து இவ்வூருக்கு பஞ்சம் பிழைக்க, பசுமாடுகளுடன் வந்தவர்களுள் ஒருவள் தலையில் கூடை ஒன்றை சுமந்து வந்தாள். திடீரென கூடையின் சுமை அதிகரிக்கத் தொடங்கியது. கூடையை கீழே இறக்கி வைத்துப் பார்த்தாள். அந்தக் கூடையில் சாளக்ராம வடிவில் அம்மிக்கல் போன்று ஏதோ ஒன்று தென்பட்டது. அது எப்படி கூடைக்குள் வந்தது என யோசித்து ஒன்றும் விளங்காமல் அதை தூக்கி வெளியே போட்டு விட்டு நடந்தாள். மீண்டும் கூடை கனத்தது. இறக்கி வைத்துப் பார்த்ததில் தூக்கிப் போடப்பட்ட அதே கல் கூடைக்குள் இருந்தது. இம்முறை அதை தூக்கி குளத்திற்குள் வீசினாள். குளத்தில் போடப்பட்ட கல் மீண்டும் கூடைக்குள் வந்தது. மீண்டும் கூடை கனத்தது. கடைசியில் அந்தக் கல்லை ஒரு புற்றருகே வைத்துவிட்டு ஓடி விட்டாள். ஊர்ப் பெரியவர் ஒருவரின் கனவில் தோன்றிய நரசிம்மர் தான் புற்றருகே இருப்பதை சுட்டிக் காட்டினார். இவ்வாறாக இங்கு சுயம்பு நரசிம்மர் கோவில் கொண்டதாக ஸ்தல வரலாறு. அக்காலத்தில் மூலவர்க்கு திருமஞ்சனம் செய்யும்போது புற்று மண் ஸ்வாமியை மூடிக் கொண்டே வருமாம். புற்று மண்ணை அகற்றிவிட்டு திருமஞ்சனம் செய்வார்களாம். புற்றின் வாயில் ஒரு தட்டை வைத்து மூடி வைப்பார்களாம். மறு நாள் காலை தட்டு கீழே தட்டப்பட்டு இருக்குமாம். பௌர்ணமி/அமாவாசை நாட்களில் பாம்பு ஒன்று புற்றிலிருந்து வெளியே வந்து போவதாக கூறுகின்றனர்.
பாம்புப்புற்றுடன் கூடிய மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ லட்சுமி நரசிம்மஸ்வாமி சுயம்புவாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். பிரதோஷ காலத்தில் தானாக தோன்றியவர். சுயம்பு நரசிம்மரின் வலது புறமாக ஸ்ரீ லட்சுமியின் திருவுருவம் உள்ளது. ஸ்ரீ பூமி தேவி - ஸ்ரீ நீளா தேவி சமேத லட்சுமி நரசிம்மர் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரின் உற்சவ மூர்த்தங்கள் பேரெழிலுடன் விளங்குகின்றன. பல விதமான அழகிய சுதை சிற்பங்களை சபா மண்டபத்தில் காணலாம். அரசமரத்தடி விநாயகர், வன்னி மரத்தடி விநாயகர், விஷ்ணு துர்க்கை ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். சௌந்தரவள்ளி சமேத சோமேஸ்வரர் எழுந்தருளியுள்ள சிவாலயம் ஒன்றும் இவ்வூரிலுள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.