அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் திருக்கோவில் (காருவள்ளி)

God Name : ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

 ்

 ்

 ்

 ்

300 படிக்கட்டுகளைக் கடந்து ஏறிச் சென்று பெருமாளை சேவிக்கலாம். 'சின்னத் திருப்பதி' எனப் பிரபலம். மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் மிகுந்த வரப்பிரசாதியாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். மூலவரின் மார்பில் லட்சுமி அமைய, இருபுறமும் ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டும்தான் என்கின்றனர். ஸ்ரீ அலர்மேல் மங்கைத் தாயார் உடன் இருந்து அருள் புரிகின்றார். விஷ்ணுவிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொண்ட பிருகு முனிவரை, விஷ்ணு ஆலிங்கனம் செய்துகொள்கிறாரே எனக் கோபம் கொண்ட மகாலட்சுமி இங்கு வந்து தவம் புரியலானாள். இங்குள்ள புற்றில் மறைந்திருந்தார் பெருமாள். பசு ஒன்று புற்றினில் பால் சொரிவதைக் கண்ணுற்ற இடையர்களால் கண்டெடுக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்து ஸ்தாபிக்கப்பட்ட கோவில் எனக் குறிப்பொன்று கூறுகிறது. சரபங்க முனிவர் ஹோமம் செய்த ஊர் என்பதால் ஓமலூர் எனப் பெயர் கொண்டது. இவருடைய ஆசிரமம் வழியே ஓடி வரும் நதி என்பதால் சரபங்க நதி என வழங்கலாயிற்று. இவருடைய ஆசிரமத்திற்கு விஜயம் செய்த ராமர் விஜயராகவன் எனும் பெயரில் இவ்வூரில் கோவில் கொண்டுள்ளார். வசந்தேஸ்வரர் சிவாலயமும் இருக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.