அருள்மிகு காயநிர்மலேஸ்வரர் திருக்கோவில் (ஆத்தூர் - சேலம்)
God Name : காயநிர்மலேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
வசிஷ்ட நதிக்கரையோரமாக உள்ள ஐந்து தலங்களில் இது மூன்றாவது ஸ்தலம். இங்கு வசிஷ்ட நதி, ஸ்வேத நதி, மாலையாறு, சிற்றாறு ஆகியன ஆறாய் ஓடுவதால் 'ஆற்றூர்' எனப் பெயர் கொண்டு பின்னர் மருவி 'ஆத்தூர்' என்றானது. முன்பு 'அனந்தகிரி' என்றழைக்கப்பட்டதாம்.
தாம் மேற்கொள்ளவிருக்கும் தவத்திற்கு இடையூறு ஏதும் வராதிருக்க சிவபூஜை செய்யத் தீர்மானித்த வசிஷ்ட மகரிஷி, இத்தலத்திலுள்ள மேடான பகுதி ஒன்றில் புதையுண்டு சுயம்புவாக இருந்த சிவலிங்கம் ஒன்றைக் கண்டு, அதை வெளிக் கொணர்ந்து, பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. பூஜைக்கு ஏதுவாக தீர்த்தம் ஒன்றையும் அமைத்தார்.
வெளியே பிள்ளையார் கோவில் ஒன்றும் உள்ளது. இங்குள்ள பிள்ளையார் தலையை ஆட்டும் விதமாக இடது புறமாக சாய்த்த நிலையில் காணப்படுகிறார். இதனால் 'தலையாட்டி பிள்ளையார்' என்று அழைக்கின்றனர்.
மூலவர்: காயநிர்மலேஸ்வரர்் அம்பாள்: அகிலாண்டேஸ்வரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் காயநிர்மலேஸ்வரர். அழகிய லிங்கத் திருமேனி.
மூலவர்க்கு தைலக் காப்பிட்டு கற்பூர ஆரத்தி காட்டும்போது அவரது மேனியில் கற்பூர ஜோதியின் ஒளி மிகவும் அழகாக தெரிவதைப் பார்க்கலாம். வசிஷ்டேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு.
'காயம்' என்றால் உடம்பு் 'நிர்மலம்' என்றால் பரிசுத்தம். பரிசுத்தமான திருமேனியைக் கொண்டுள்ளதால் காயநிர்மலேஸ்வரர் (அ) பரிசுத்தசிவன் என்ற திருநாமம் கொண்டார்.
அன்னை அகிலாண்டேஸ்வரி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
கோஷ்டத்தில் அழகிய மூர்த்தங்கள். வலச்சுற்றில் விநாயகர், முருகன், ஐயப்பன் ஆகிய மூர்த்தங்களைக் காணலாம். இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு ஆறு சீடர்கள் உள்ளனர். அனந்தேஸ்வரரை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.