அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில் (பேளூர்)

God Name : தான்தோன்றீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

புகழ் பெற்ற சிற்பங்களை உள்ளடக்கிய இக்கோவில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. வசிஷ்ட ரிஷி வேள்வி ஒன்றினை செய்த காரணத்தால் 'வேள்வியூர்' எனப் பெயருற்று, பின்னர் மருவி 'வேளூர்' என்றாகி தற்போது 'பேளூர்' என்றழைக்கப்படுகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான கணம்புல்ல நாயனார் அவதரித்த ஸ்தலம் இது. தன் சொத்துக்கள் முழுவதையும் சிவனடியார்களுக்காக செலவழித்துவிட்டு ஏழையாகி, சிதம்பரம் சென்று கோவில் விளக்குகளை ஏற்றும் கைங்கரியம் செய்து வந்தார். புல்லை வெட்டி விற்று, அதில் வரும் காசுக்கு விளக்கேற்றும் தொண்டினை செய்து வந்தார். ஒரு சமயம் போதிய அளவு புல் கிடைக்காமல் போகவே, செய்வதறியாது திகைத்த கணம்புல்ல நாயனார் தனது தலைமுடியை வெட்ட முற்பட்டபோது, இறைவன் தடுத்தாட்கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலவர்: தான்தோன்றீஸ்வரர் மற்றும் அம்பாள்: தர்மசம்வர்த்தினி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் தான்தோன்றீஸ்வரர். சுயம்பு சிவலிங்க மூர்த்தம். கருணை மூர்த்தியாக போற்றப்படுகிறார். அம்பாள் தர்மசம்வர்த்தினி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். 'அறம் வளர்த்த நாயகி' என்றப் பெயரும் உண்டு. சித்திரை மாதம் 3, 5, 10 ஆம் தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீதும், அம்பாள் மீதும் மற்றும் கோடிலிங்கம் மீதும் படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. வலச்சுற்றில் ஜேஷ்டா தேவி, கஜலட்சுமி, வராஹ ரௌத்ரி, சுப்ரமண்யர், தட்சிணாமூர்த்தி, சஹஸ்ரலிங்கம், கலியுக சுப்ரமண்யர், துர்க்கை ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். சித்தி விநாயகர் மற்றும் இரட்டை பிள்ளையார் சந்நிதிகள் பிரசித்தி பெற்றவை. இங்குள்ள கல்யாண கணபதி மிகுந்த சாந்நித்யம் கொண்டவர். இங்குள்ள அரச மரத்தில் கன்னிப் பெண்கள் தாலி கட்டும் பிரார்த்தனை வழக்கமாக உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.