அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில் (அயோத்யாபட்டினம்)

God Name : மூலவர் மற்றும் உற்சவர்: ஸ்ரீ கோதண்டராமர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

ராவண சம்ஹாரம் முடித்து, விபீஷணனுக்கு பட்டம் சூட்டிவிட்டு, ஸ்ரீ ராமர் அயோத்தி திரும்பும் வழியில் இத்தலத்தில் தங்கினார். அப்போது உடனிருந்த விபீஷணன், "தங்களது பட்டாபிஷேகத்தைக் காண அயோத்திக்கு வர முடிகிறதோ இல்லையோ, இப்போதே பார்க்க ஆசையாக உள்ளது" என்றான். அவனது வேண்டுகோளைப் பூர்த்தி செய்ய, பின்னால் நடக்கவிருக்கும் பட்டாபிஷேக காட்சியை இத்தலத்திலேயே காட்டியருளிய கோலத்தை அப்படியே வடித்துள்ளனர். இத்தலத்திற்கு ஸ்ரீ ராமர் வந்ததன் அடையாளமாக, ஓமலூர் நெடுஞ்சாலையின் கற்பாறை ஒன்றில் ராமரின் பாதம் பதிந்த சுவடு காணப்படுகிறது. மாரீசன் மாயமானாகத் தோன்றிய பொய்மான் கரடு எனும் இடம், ராமர் நீரூற்று ஆகிய இடங்கள் அருகாமையில் அமைந்துள்ளன.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ கோதண்டராமர் பட்டாபிஷேக கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இடக்கையில் தாமரை மலர் ஏந்தியும், வலக்கையால் ஆசிர்வதிக்கும் கோலத்திலும், பத்மாசனமாக அமர்ந்த கோலத்தில் சீதா தேவி காட்சி தருகின்றாள். லக்ஷ்மணன் உடைவாள் ஏந்தியபடியும், பரதன் குடை பிடிக்கும் நிலையிலும், சத்ருக்ணன் சாமரம் வீசியபடியும் காட்சி தருகின்றனர். அங்கதன் - சுக்ரீவன் இருவரும் அருகே நிற்கின்றனர். ஸ்ரீ சீதாலட்சுமி உடனாய ஸ்ரீ கோதண்டராமரின் உற்சவ விக்ரஹங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. அர்த்த மண்டபத்தின் மேல் தசாவதார சிற்பங்கள் உள்ளன. சற்று தள்ளி ஆஞ்சநேயர் சந்நிதி அமைந்துள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.