அருள்மிகு ஸ்ரீ சற்குரு பாலமுருகன் திருக்கோயில் (கஞ்சமலை)

God Name : ஸ்ரீ சற்குரு பாலமுருகன்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

இரும்புக்கனிகளும், உலோகங்களின் மூலப்பொருட்களும், மூலிகைகளும் நிறைந்துள்ள மலை இது. இந்த மலையிலிருந்து எடுக்கப்பட்ட இரும்பால் செய்த வாள் அலெக்ஸாண்டர் கைகளில் இருந்ததாகக் கூறுவர். இளம்பிள்ளை எனும் ஊர் - டெக்ஸ்டைல்/பட்டுப் புடவை, உயர்ரக சுடிதார் மெட்டீரியல்களுக்குப் பெயர் பெற்றது. பணியாரம் பிரசித்தி பெற்றது.
கிழக்கு மேற்காக 7 மைல் நீளமுள்ள கஞ்சமலைத் தொடரின் மலையுச்சியில் திருக்கோயில் அமைந்துள்ளது. 100 படிக்கட்டுகள் ஏறிச் செல்லும் நடைபாதையும், காரில் செல்லும் பாதை வசதியும் உள்ளன. மூலஸ்தானத்தில் மூலவராக பாலமுருகன் இடக்கையை இடுப்பில் ஊன்றி ஒய்யாரமாக நிற்கும் காட்சியை கண்டு மகிழலாம். தகப்பனுக்கு ஞானஉபதேசம் செய்தருளிய சற்குரு பாலமுருகனைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் - அத்தனை அழகு. வேல் பிரதிஷ்டை செய்யப்பட்ட தனி சந்நிதி உள்ளது. வலச்சுற்றில் பிரம்மா, விஷ்ணு, நாரதர், ஐயப்பன் ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம். இங்கிருந்து சற்று மேலே சித்தர் கோயில் உள்ளது. மூலவராக பெரியாண்டவர் எழுந்தருளியுள்ளார். நடுவில் விபூதிப்பட்டையும் குங்குமமும் இடப்பட்ட ஒரு கல். விக்ரஹ உருவமாக இல்லை. சுற்றிலும் வேல்களும் சூலங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. ஆலமரம், அரசமரம், கொன்றை மரம் சூழ்ந்த ஸ்தலம். ஒரு மைல் தொலைவில் கன்னிமார் கோயிலும் உள்ளது. கற்களை அம்மனாகப் பாவித்து வழிபடுகின்றனர். வேலும் சூலங்களும் நடப்பட்டுள்ளன. சப்த கன்னியர்கள் எழுந்தருளியுள்ளார்கள்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.