அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவில் (ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம்), உடையார்பட்டி

God Name : ஸ்ரீ தண்டாயுதபாணி

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

ஸ்ரீமத் ஸ்வயம் பிரகாச சரஸ்வதி ஸ்வாமிகளை குருவாக ஏற்று அனைத்தையும் முறையாக கற்றுணர்ந்த சிஷ்யர் பாலயோகி சுப்ரமண்யம். பாலயோகி சுப்ரமண்யத்திற்கு சாந்தாநந்தா எனும் தீட்சா நாமத்தை அளித்தார் ஸ்வயம் பிரகாசர். புதுக்கோட்டை அதிஷ்டானத்தைப் பராமரித்து உயர்வடையச் செய்யுமாறு குருநாதர் பணித்ததால் புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்துகொண்டு பணியாற்றினார் சாந்தாநந்தா. ஸ்ரீ சாந்தாநந்தா ஸ்வாமிகளின் கனவில் கந்தப்பெருமான் ஜோதியாகத் தரிசனம் தந்தார். மறுநாளே பக்தர் ஒருவர் தண்டாயுதபாணியின் விக்ரகத்தைக் கொண்டு வந்து தந்தார். முருகனுக்கு ஆலயம் அமைய வேண்டிய இடமும் கனவில் தோன்றியது. கனவில் வந்த அதே இடத்தைக் கண்டுபிடித்து இந்த ஆஸ்ரமத்தையும், ஆலயத்தையும் உருவாக்கியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. (காலை 7.00 முதல் காலை 8.30 மணி வரை - அபிஷேகங்கள். பின்பு மகந்நியாஸ ஜபம் (காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை) சப்தசதி பாராயணம் மற்றும் பூஜை 12.00 மணி வரை, மாலையில் (4.00 மணி முதல், 6.30 மணி வரை தேவி மஹாத்மியம் படிக்கின்றனர். 6.30 மணி முதல் 7.15 மணி வரை பூஜை.
சுற்றிலும் சிறிய மலைக்குன்றுகள், தென்னை, வாழை, நெற்பயிர்கள் சூழ்ந்த வளமான பூமியில் 250 அடி உயரமுள்ள பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. தெளிந்த நீரோடைகளும் இருக்கின்றன. குன்றின் மீது ஏற படிக்கட்டுகள் அமைத்துள்ளனர். காரில் போக சரிவுப் பாதைகளும் உள்ளன. ஸ்ரீ சங்கட ஹர விநாயகரிடம் ஆசி பெற்று, இடும்பனையும் தரிசித்துக்கொண்டு குன்றின் மீது ஏறுகின்றனர். மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ தண்டாயுதபாணி ஞானஸ்கந்தக் கோலம் கொண்டு கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். ஐந்தரை அடி உயரம் கொண்ட வரப்பிரசாதி. வலக்கரத்தில் தண்டம் ஏந்தியுள்ளார். தாமரைத் திருவடிகளை தரிசிக்க ஆனந்தம் கிடைக்கிறது. கருவறையின் வலப்புறமாக வல்லபை கணபதி பத்துக் கரங்களுடன் தரிசனம் தருகின்றார். நால்வர் மற்றும் அருணகிரிநாதரை மண்டபத்தில் காணலாம். மேல் தளத்தில் ஸ்ரீ ஜட்ஜ் ஸ்வாமிகளின் திருவுருவம் காணலாம். நேர் எதிரேயுள்ள சந்நிதியில் அஷ்டதசபுஜ மஹாலட்சுமி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஆறரை அடி உயரமும் ஒரு டன் எடையும் கொண்ட அழகிய பஞ்சலோக விக்ரஹம். தனது பதினெட்டுக் கரங்களில் அட்சமாலை, தாமரை, பாணம், வாள், வஜ்ராயுதம், கதாயுதம், சக்கரம், திரிசூலம், பரசு, சங்கு, மணி, பாசம், வேல், தண்டம், வில், கேடயம், பாணபத்ரம், கமண்டலம் ஆகியன கொண்டுள்ளார். தாமரை மலர் மீது நிற்பதால் மஹாலட்சுமியாகவும், அட்சமாலை மற்றும் கமண்டலம் இவற்றை கொண்டுள்ளதால் சரஸ்வதியாகவும், பிற ஆயுதங்களால் துர்க்கையாகவும் விளங்குகிறாள். திருவாசியில் நவதுர்க்கைகளின் திருவுருவங்கள் இருக்கின்றன. பஞ்சமுக விநாயகர் சிம்மத்தின் மீது வீற்றிருக்கின்றார். ஹேரம்ப கணபதி அழகாகக் காட்சியளிக்கின்றார். பஞ்சமுக ஆஞ்சநேயர், தத்தாத்ரேயர், தன்வந்த்ரி, ஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஆகிய திருவுருவங்கள் வியக்க வைக்கும் சிலைகள். இவை யாவும் பிரம்மாண்டமான திருவுருவங்களாகக் காட்சியளிக்கின்றன. ஐயப்பன், ஜட்ஜ் ஸ்வாமிகள், ஆதி சங்கரர், ராமாநுஜர், வியாசர், மாத்வர், அத்ரி, நாரதர், ராகவேந்திரர், வள்ளலார், தத்தம் தர்மபத்னிகளுடன் நவகிரகங்கள் என அநேக மூர்த்தங்களை இங்கு தரிசிக்கலாம். குன்றின் கீழே கன்னிமார் ஓடை எனும் வற்றாத நீருற்று உள்ளது. கன்னிமார் சிலையும் உள்ளது. பாறையையொட்டி சப்த கன்னிமார்கள் எழுந்தருளியுள்ளனர். கார்த்திகை மாதத்தில் நடக்கும் ஸ்கந்த ஜோதி பிரசித்தமானது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.