அருள்மிகு ஸ்ரீ காவடி பழநி ஆண்டவர் ஆஸ்ரமம் (ஜாகீர் அம்மாபாளையம்)
God Name : ஸ்ரீ காவடி பழநி ஆண்டவர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
காவடியைப் பார்த்து அருள் ஏற்பட்டு பழநி சென்றதாலும், அடிக்கடி அருள்வாக்கு கூற முருகன் வருவதாலும் காவடி பழநி ஆண்டவர் எனும் பெயரை இவ்வாலயம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாவாயி அம்மாள் என்பவரால் 1945ஆம் ஆண்டு சிறிய கோவிலாக நிறுவப்பட்டு படங்களும் வேலும் வைத்து பூஜை மேற்கொள்ளப்பட்டதாகவும் பின்னர் 1961ல் பெரிய கோவிலாக உருவானதாகவும் கூறப்படுகிறது.
திருப்புகழ் பஜன்கள் நடத்துகின்றனர். அக்னி நட்சத்திர நாட்களில் வழிப்போக்கர்களுக்கு நீர்மோர் - பானகம் தருகின்றனர்.
பிரதான கருவறையில் ஸ்ரீ காவடி பழநி ஆண்டவர் கல்யாண முருகனாக தரிசனம் தருகின்றார். வள்ளி மற்றும் தெய்வானை தேவியர்கள் உடன் உள்ளனர். தேவியர்களுடன் காணப்படும் முருகனின் உற்சவ மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன.
பக்கத்தில் ஆதி பராசக்தி அன்னை வீர மாகாளியாக கோவில் கொண்டுள்ளார். வீரமாகாளி கல்கத்தாவில் உள்ளது போல் உக்ரமாக இருக்கின்றாள்.
வினை தீர்க்கும் விநாயகரிடம் ஆசி பெற்று, பாவை அம்மன் அதிஷ்டானம், கருப்பண்ணசாமி, இடும்பன் - கடம்பன் ஆகிய சந்நிதிகளை தரிசித்துவிட்டு வலம் வரலாம்.
வலச்சுற்றில் நாகராஜா - நாகராணியுடன் தீர்த்த பிள்ளையாரைக் காணலாம். வீரபாஹு, குஹ சந்திரன், குஹ சூரியன், ஸ்கந்த பைரவர் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர்.
இலங்கை கதிர்காமத்திலிருந்து வந்த காவடியும் காவடி அறையும் காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.