அருள்மிகு ஸ்ரீ ராஜமாதங்கி திருக் கோவில் (சேலம் - மன்னார்பாளையம்)

God Name : -

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ ராஜமாதங்கி அழகே உருவாக காட்சி தருகிறாள். இரண்டு காதுகளில் குண்டலம் தரித்து, ரத்னாபரணங்கள் அணிந்து, பிறைச்சந்திரனை சிரசில் சூடி, ரத்ன சிம்மாசனத்தில் அமர்ந்த கோலம். கிளி, அங்குசம், அமிர்த கலசம், சார பட்சி, பாசம், நெற்கதிர் ஆகியன கொண்ட அஷ்ட புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. மிகுந்த வரப்ரசாதி. ருத்ர வீணையை இரு கரங்களில் மீட்டியபடியும் காட்சி தருகின்றாள். எதிரே கிளி வாகனம். வலச்சுற்றில் வாராஹி, முத்துஸ்வாமி தீட்சிதர், மதங்க முனிவர் ஆகியோரை தரிசிக்கலாம். சங்கீத யோகினி, ச்யாமளா, மந்த்ர நாயிகா, மந்த்ரிணி, ஸசிவேஸானி, ப்ரதானேசி, ஸுகப்ரியா, வீணாவதி, வைணிக்கி, முத்ரிணி, ப்ரியகப்ரியா, நீபப்ரியா, கதம்பேசி, கதம்பவனநாசினி, ஸதமாதா, மாதங்கி ஆகிய 16 நாமாக்களால் துதிக்கப்படுபவள். கலைமகளின் வடிவமான இவள் சங்கீதப்ரியை. மதங்க முனிவரின் புதல்வி, கதம்ப வனத்தில் வசிப்பவள் என ஸ்தல புராணம் விவரிக்கின்றது. ஸ்ரீநகர சாம்ராஜ்யத்தை நிர்வகிக்கும் பொறுப்பை தேவி லலிதையிடமிருந்து பெற்றவள். இவளுக்கு நகுலேஸ்வரி, வாக்வாதினி எனும் இரு தோழிகள் உண்டு. மதுரை மீனாட்சி இந்த அம்பிகையின் ஸ்வரூபமே எனக் கூறப்படுகிறது. கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க இவளை பிரார்த்திக்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.