அருள்மிகு ஸ்ரீ வித்யா - ஸ்ரீ பரா ஷோடஸி ஆஸ்ரமம் (சேலம்)

God Name : இல்லை

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ பரா லலிதா பரமேஸ்வரி அன்னை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். பிரகாசமான அழகு முகம். அங்குசம், அக்ஷ மாலை, தாமரை மலர், புஷ்ப பாணம், பாசம், புஸ்தகம், கரும்பு வில், அபய - வரத முத்திரை ஆகியன கொண்டும், இரு கரங்களால் மாணிக்க வீணையை வாசிக்கும் பாவம் கொண்டும் தரிசனம் தருகின்றாள். இவள் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம், அநுக்ரஹம் ஆகிய ஐந்து தொழில்களை செய்கின்றாள். ஸ்ரீ மஹா வாராஹி தேவி - லலிதா பரமேஸ்வரியின் சேனைகளுக்கு தலைவியாக வீற்றிருக்கின்றாள். சப்த மாதர்களில் ஐந்தாவது தேவியானதால் பஞ்சமி என்றும் அழைக்கின்றனர். ஸ்ரீ உக்ர ப்ரத்யங்கிரா தேவி சிம்ம வாகினியாக, சிம்ம முகம் கொண்டு தரிசனம் தருகின்றாள். குகை போன்ற வாய், கோடிக்கணக்கான தெற்றுப் பற்கள், மூன்று கண்கள், சந்திரக்கலை அணிந்த சிரசு ஆகியவற்றுடன் பெரிய திருவுருவமாக காட்சி தருகின்றாள். அங்கிரஸ் - பிரத்யங்கிரஸ் எனும் இரண்டு ரிஷிகள் இவளுடைய மந்திரத்தை கண்டுபிடித்ததால் ப்ரத்யங்கிரா எனப்படுகிறாள். ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மும்மூர்த்திகளின் அம்சமாகவும், ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷிணி த்ரிசக்தி ஸ்வரூபிணியாகவும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதி, ஸ்ரீ தத்தாத்ரேயர், ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீ மாதங்கி, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ சரபேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். மலைகள் சூழ்ந்து காணப்பட்ட பிரதேசம் என்பதால் சைலம் என்றழைக்கப்பட்டு பின்னர் மருவி சேலம் என்றானதாக கூறப்படுகிறது. சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததால் சேரலம் எனப் பெயர் கொண்டு பின்னர் மருவி சேலம் என்றானதாகவும் கூறுவர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.