அருள்மிகு கோட்டை ஸ்ரீ அழகிரிநாதப் பெருமாள் திருக்கோவில் (சேலம்)
God Name : மூலவர்: ஸ்ரீ அழகிரிநாதப் பெருமாள்் உற்சவர்: சுந்தரராஜப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
ஆதியில் இவ்வு+ருக்கு சதுர்வேதி மங்கலம், கருடன்காடு எனப்பட்ட தாக்ஷாரண்யம், ஸ்ரீ ஆதிசேஷபுரம், ஸ்ரீ சைலம் ஆகிய பெயர்கள் இருந்தன.
மலைகள் அமைந்த இப்பகுதியில் திருமகளை மணம் புரிந்து கொண்டதால் ஸ்ரீ சைலம் எனப் பெயருற்றது. 'சைலம்' என்கிற சொல்லே வெள்ளைக்காரனால் 'சேலம்' என உச்சரிக்கப்பட்டு அதுவே தொடர்கிறதாம்.
மலைகள் சூழ்ந்து காணப்பட்ட பிரதேசம் என்பதால் 'சைலம்' என்றழைக்கப்பட்டு பின்னர் மருவி 'சேலம்' என்றானதாக கூறப்படுகிறது. சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததால் 'சேரலம்' எனப் பெயர் கொண்டு பின்னர் மருவி 'சேலம்' என்றானதாகவும் கூறுவர்.
ப்ருகு முனிவரின் மகளாகப் பிறந்து, அழகியவல்லி என்ற பெயர் கொண்டு வளர்ந்து வந்தாள் மஹாலட்சுமி. அவதரித்த தினம் மாசி மகம். சின்னத்திருப்பதி என்றழைக்கப்படும் திருமலையிலிருந்த ஸ்ரீநிவாசர், இவளை மணக்கும் யோசனையில் இக்கோவிலுக்குள்ளிருந்த புற்றில் மறைந்து இருந்தார். ஒரு நாள் வெளியே வந்து பிரம்மச்சாரி வேடம் பூண்டு, ப்ருகு முனிவரிடம் வந்து பெண் கேட்டார்.
வந்திருப்பவர் யார் என்பதை தனது ஞானக்கண்ணால் தெரிந்து கொண்ட ப்ருகு முனிவர், தனது மகளான அழகியவல்லியை ஸ்ரீநிவாசருக்கு மணம் முடித்து தந்தார். பெண் பார்க்கும் படலம் இக்கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது.
ஆஞ்சநேயர் பிரம்ம பட்டம் பெற கிளம்பியபோது அப்பெருமாளின் அழகைக் கண்டு வியந்து இங்கேயே தங்கி விட்டதாக ஸ்தல வரலாறு.
பெருமாள் மறைந்திருந்த புற்றை அனைவரும் வழிபடுகின்றனர். கோட்டை இப்போது இல்லை. அதன் அடையாளமாக கோட்டைமேடு உள்ளது.
மூலவர்: ஸ்ரீ அழகிரிநாதப் பெருமாள்் உற்சவர்: சுந்தரராஜப் பெருமாள்் தாயார்: ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார்.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ அழகிரிநாதப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். 10 அடி உயரம் கொண்ட அழகான திருமேனி. ஸ்ரீ தேவி, பூதேவி தாயார்கள் உடன் உள்ளனர். உற்சவ மூர்த்தியான சுந்தரராஜப் பெருமாள் மிகவும் அழகாக இருக்கின்றார்.
தாயார் ஸ்ரீ சுந்தரவல்லி தனிக் கோவில் கொண்டுள்ளார். அழகியவல்லி என்ற பெயரும் உண்டு.
கொடி மரத்தின் நேர் எதிரே பெரிய திருவடி எழுந்தருளியுள்ளார். பின்புறமாக 11 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயரை சேவிக்கலாம். சுதர்ஸன சக்கரத்தாழ்வார் சந்நிதி கொண்டுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.