அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் (சேலம்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
மலைகள் சூழ்ந்து காணப்பட்ட பிரதேசம் என்பதால் சைலம் என்றழைக்கப்பட்டு பின்னர் மருவி சேலம் என்றானதாக கூறப்படுகிறது. சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததால் சேரலம் எனப் பெயர் கொண்டு பின்னர் மருவி சேலம் என்றானதாகவும் கூறுவர்.
மூலஸ்தானத்தில் கோட்டை மாரியம்மன் யோகாசன நிலையில், வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகின்றாள். தேஜோமயமான அழகான திருவுருவம். சிரசில் ஜ்வாலா க்ரீடம் ஒளி வீச, காருண்ய முகத்துடன் நாகபாசம், உடுக்கை, திரிசூலம், அங்குசம் கொண்ட சதுர்புஜங்களுடனும், திருவடிகளருகே தாமரை புஷ்பம் கொண்டும் தரிசனம் தரும் இவள் மிகுந்த வரப்பிரசாதி. கோட்டை மாரி என போற்றி வழிபடுகின்றனர்.
வெளிப் பிரகாரத்தில் பொம்மி - வெள்ளையம்மாள் உடனாய மதுரை வீரன், விநாயகர் மற்றும் நாகர் ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம்.
கோட்டையாக இருந்தபோது கட்டப்பட்ட ராஜகோபுரம். வெளி பிரகார மண்டபம், கிளி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியன உள்ளன.
பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், கரகாட்டம், பொங்கலிடுதல், உருளுதண்டம், உருவாரம் சாத்துதல் போன்ற பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.
எட்டு பேட்டைகளை கட்டியாளும் கோட்டைமாரியம்மனின் பூச்சூட்டு விழாவின் போது ஏனைய ஏழு கோவில் மாரியம்மன்களின் பூச்சூட்டு விழாவிற்கு பூக்கள் இங்கிருந்து போவதாக கூறப்படுகிறது.
இங்கு நைவேத்தியம் படைப்பதில்லை. அம்மனுக்கு ஊட்டியே விடுவதாக கூறுகின்றனர்.
வெள்ளை - சிகப்பு நிற புஷ்பங்களை அம்மன் முன்பாக போட்டுப் பார்த்து, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் சம்ப்ரதாயம் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.