அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் (ராசிபுரம்)

God Name : ஸ்ரீ கைலாசநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

ராணிப்பேட்டை

Call : +91-

கொல்லி மலை, அலவாய் மலை, போத மலை, நயினா மலை ஆகிய நான்கு மலைகளால் சூழப்பட்ட கிராமம் ராஜபுரம். இதுவே நாளடைவில் மருவி ராசிபுரம் என்றானது. இப்பகுதியை ஆண்ட வல்வில் ஓரி, ஒரு சமயம் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு வெண்பன்றி மீது அம்பெய்தான். அம்பால் அடிபட்ட பன்றி அருகிலிருந்த புதருக்குள் மறைந்தது. புதருக்குள் தேடியதில் ரத்தக் கசிவுடன் சிவலிங்கம் தென்பட்டது. சிவ அபராதம் செய்தமைக்கு வருந்திய வல்வில் ஓரி, புதரை சீராக்கி, அந்த இடத்தில் லிங்கப் பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. கோவிலின் கொடிக்கம்பத்தில் வெண்பன்றியின் உருவம் உள்ளது. வள்ளல் ஓரியின் அழகிய சிலை ஒன்றும் உள்ளது.
மூலவர்: ஸ்ரீ கைலாசநாதர், அம்பாள்: ஸ்ரீ தர்மசம்வர்த்தினி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ கைலாசநாதர். அம்பு பட்ட தழும்பு திருமேனியில் காணப்படுகிறது. உயரமான பாணத்துடன் கம்பீரமாக தரிசனம் தருகின்றார். சுயம்பு லிங்கம். மேற்கு பார்த்த சந்நிதி. கோஷ்டத்திலுள்ள சந்நிதியில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தி கொள்ளை அழகுடன் தரிசனம் தருகிறார். ஒவ்வொரு தமிழ் மாத வியாழனன்றும் சுவாமியின் சிரசில் மஞ்சள் கயிறுகளைக் கட்டி சிறப்பு ஆராதனைகள் செய்வார்கள். பின்னர் அதை மாணவ மாணவியருக்கு விநியோகிப்பார்கள். இவருக்கு உற்சவ மூர்த்தமும் உண்டு. நந்தியம் பெருமான் அழகாக இருக்கின்றார். பிரதோஷ நாட்களில் பச்சரிசி மாவு காப்பிட்டு, நாணயங்களை பதித்து அலங்கரித்திருப்பது பார்க்க ரம்யமாக இருக்கும். பரசு, மோதகம், ருத்ராட்சம் ஆகியன ஏந்திய கரங்களுடன் காட்சி தரும் ஸ்ரீ சகடவிநாயகர் மிகுந்த வரப்பிரசாதி. ஒரே கல்லால் உருவாக்கப்பட்டவர். சுவாமியின் வலப்பக்கத்தில் அம்பாள் ஸ்ரீ தர்மசம்வர்த்தினி கிழக்கு பார்த்து எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். இவளை ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி என்று தமிழில் அழைக்கின்றனர். கல்யாண முருகனாக ஸ்ரீ ஆறுமுகன் வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடனிருக்க காட்சி தருகிறார். காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ்வரர், காளத்தீஸ்வரர், சிவசூரியன், பர்வதவர்த்தினி சகித ராமநாதர், கையில் வீணையுடன் பாலசரஸ்வதி, காலபைரவர், சனீஸ்வரர் மற்றும் நாகர்களை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.