அருள்மிகு வரதராஜ சுவாமி திருக்கோவில் (நைனாமலை)
God Name : ஸ்ரீ வரதராஜப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
ராணிப்பேட்டை
Call : +91-
நேத்திரபாதர் எனப்படும் நயன ரிஷி இத்தலத்திற்கு வந்து ஸ்ரீ வரதராஜரைக் குறித்து தவம் செய்து பரம்பொருளுடன்
ஐக்கியமாகி விட்டார். இதனால் இத்தலம் நயனகிரி என்ற பெயரைக் கொண்டது.
இத்தலத்திலுள்ள பத்ம தீர்த்தத்தின் தாமரை மலரில் குழந்தையாக அவதரித்த மகாலட்சுமியை எடுத்து வளர்த்து
வந்தார் பிருகு முனிவர். குவலயவல்லி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். திருமணப் பருவம் வந்ததும் நாராயணனை
மணந்து கொண்டாள் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
இங்கு தவம் செய்து கொண்டிருந்த விஷ்ணுதாசருக்கு தண்டன் எனும் அசுரன் தீங்கிழைத்தான். இதன் காரணமாக
கோபம் கொண்ட விஷ்ணுதாசர், நயன மலையில் தவம் செய்பவர்களுக்கு யார் கெடுதி செய்தாலும் அவர்கள்
கற்பாறைகளாக மாறக் கடவது என சபித்தார்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் வீடுகளில் மாவிளக்கு போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
மலை மற்றும் மலையடிவாரம்:
2600 அடி உயரம் கொண்ட இம்மலைக்கு மேலே செல்ல 3400 படிகள் ஏற வேண்டும். மலையடிவாரத்தில்,
மலை காளான் எனும் காவல் தெய்வத்தையும், படிகள் தொடங்கும் இடத்தில் வீர ஆஞ்சநேயரையும் சேவித்து ஆசி பெற்று
படிகளை ஏறிச் செல்ல வேண்டும்.
(குறிப்பு: மலை மீது எதுவும் கிடைக்காது. அர்ச்சனைப் பொருட்கள் மற்றும் ஆகாரம் ஆகியவற்றை கையுடன் எடுத்துச்
செல்ல வேண்டும்).
மலை உச்சி கோவில்:
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றார்.
ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். ஆனி - ஆடி மாதங்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமி
மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. உற்சவ மூர்த்தியின் எழில் வடிவம் கண்களிலேயே நிற்கின்றது. எதிரே
கருடாழ்வார் சந்நிதி கொண்டுள்ளார்.
கருடாழ்வாரின் முன் மண்டபத் தூண்களில் தசாவதாரக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. கோஷ்டத்தில்
ஆழ்வாராதிகளை சேவிக்கலாம்.
சீதா தேவி, லக்ஷ்மணன், கோதண்டராமர், ருக்மணி - சத்யபாமா சகித வேணுகோபாலன், நவநீத கிருஷ்ணன்
ஆகிய மூர்த்தங்களை மஹாமண்டபத்தில் சேவிக்கலாம்.
தாயார் ஸ்ரீ குவலயவல்லி சந்நிதி தென் பிரகாரத்தில் உள்ளது. பத்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலம்.
சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருவுருவம். இக்கோவிலின் உற்சவ மூர்த்தியை, பாதுகாப்புக் கருதி
சேந்தமங்கலம் லட்சுமிநாராயணர் கோவிலில் வைத்துள்ளனர்.
கோவிலுக்கு வலப்பக்கம் உள்ள பாறையில் வாலி - சுக்ரீவன் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.