அருள்மிகு ஸ்ரீ தத்தாத்ரேயர் திருக்கோவில் (சேந்தமங்கலம்)
God Name : ஸ்ரீ தத்தாத்ரேய மூர்த்தி
திருக்கழுக்குன்றம் கோவில்
ராணிப்பேட்டை
Call : +91-
ஸ்ரீ ஸ்வயம்பிரகாச பிரம்மேந்திர ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தையும், சமாதி குடியிருந்த குகையையும் தரிசிக்கலாம்.
புண்ணாக்கு சித்தர் எனும் மஹான் இங்கு சமாதியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
நயன மலையில் சாப விமோசனம் பெற்ற சந்திரன் இவ்வுரை ஏற்படுத்தி சோமபுரி எனப் பெயரிட்டு சோமேஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளான். விஸ்வாமித்ரர் இங்கு ஆலயம் ஒன்றை நிர்மாணித்து லட்சுமி நாராயணரையும், பெருந்தேவி தாயாரையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.
ஸ்ரீ ராமர் இவ்வழியாக வனவாசம் சென்றதாக குறிப்பொன்று கூறுகிறது. சப்தரிஷிகள், தேவேந்திரன், பாண்டவர்கள் ஆகியோர் இவ்வுருக்கு வந்ததால் சேர்ந்தபுரி எனப் பெயருற்று நாளடைவில் சேந்தமங்கலம் எனப் பெயர் கொண்டது.
இவ்வுரின் பேருந்து நிலையமருகே உள்ள பெருமாள் கோவிலில் ஸ்ரீ லட்சுமி நாராயணர், பெருந்தேவி தாயாருடன் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். (சௌந்தரராஜ பட்டர் - 94434 99854)
50 படிக்கட்டுக்கள் ஏறிச் சென்று தரிசிக்க வேண்டும்.
நான்கு வேதங்களே நான்கு தூண்களாக அமையப்பெற்றும், அந்த தூண்களில் பதினாறு மூர்த்தங்களின் அழகு திருவுருவங்கள் செதுக்கப்பட்டும் வடிவமைக்கப்பட்ட மூலஸ்தானம்.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ தத்தாத்ரேய மூர்த்தி எழுந்தருளி அருள் புரிகின்றார். மிகுந்த வரப்பிரசாதி. ஸ்ரீ சத்குரு ஸ்வயம்பிரகாச ஸ்வாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தம்.
ப்ரணவப் பொருளான ஆதி சிவனும், ப்ரணவத்திற்கு பொருளுரைத்த முருகப் பெருமானும் எழுந்தருளி உள்ளனர்.
பஞ்சமுக விநாயகர், பஞ்சமுக ஆஞ்சநேயர், கருப்பண்ணஸ்வாமி, கங்கா தேவி, இடும்பன் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
ஒன்பதடி உயரம் கொண்ட அழகான திருவுருவமாக முருகப் பெருமானும், ஆஜானுபாகு தோற்றத்தில் கம்பீரமாக காட்சி தரும் கார்த்தவீர்யாஜுணனும், ஏழரை அடி உயர திருவுருவமாக சனீஸ்வரரும் மேல் மண்டபத்தில் தரிசனம் தருகின்றனர். தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், வனதுர்க்கை ஆகிய மூர்த்தங்களை சபா மண்டபத்தில் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.