அருள்மிகு நரசிம்மஸ்வாமி திருக்கோவில், நாமக்கல்

God Name : ஸ்ரீ நரசிம்மஸ்வாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

ராணிப்பேட்டை

Call : +91-

ஸ்தல வரலாறு ஹிரண்ய வதம் முடித்து உக்ரமாக இருந்த நரசிம்மரை சாந்தப்படுத்த மஹாலட்சுமியை வேண்டி நின்ற தேவர்களுக்காக தேவி இங்கு வந்ததாகவும், தேவியின் வேண்டுகோளுக்கிணங்க நரசிம்மர் இங்கு எழுந்தருளியுள்ளார் என்றும் ஸ்தல புராணம் கூறுகிறது. நரசிம்ம அவதாரத்தின் அவசியத்தை இங்கு மும்மூர்த்திகள் கூடி விவாதிப்பதாக ஐதீகம். தேவதச்சனான விஸ்வகர்மா ஸ்ரீ ரங்கநாதரை வழிபட்டு அவருக்கு இங்கு கோயில் எழுப்பும் கைங்கர்யத்தை செய்தான் என்றும் ஸ்தல புராணம் மேலும் கூறுகிறது. நாமக்கல் - ஸ்தல வரலாறு ராம - ராவண யுத்தம் நிகழ்ந்த காலத்தில், இந்திரஜித்தின் மாயையால் மூர்ச்சையடைந்த லக்ஷ்மணனின் மூர்ச்சையை தெளிவிக்க, சஞ்சீவி மலையை எடுத்து வரச் செல்கிறார் ஹனுமார். சஞ்சீவி பர்வதத்துடன் வந்து வானர வீரர்களையும், லக்ஷ்மணனையும் மூர்ச்சை தெளிவித்துவிட்டு, மலையை வைத்து விட்டு திரும்புகையில் வழியில் ஓடிக் கொண்டிருந்த கண்டகி நதியில் கிடைத்த அற்புதமான சாளக்ராம கல்லை எடுத்துக் கொண்டார் ஹனுமார். இத்தலத்திலுள்ள கமலாலய குளத்தைக் கண்டதும், சிரமப் பரிகாரம் செய்து கொள்ள இங்கு தங்கினார். ஆதியில் இங்குள்ள தபோவனத்து குளக்கரையில் மஹாலட்சுமி அமர்ந்து சௌம்ய நாராயணனை நோக்கி தவம் மேற்கொண்டிருந்தாள். கமலாசினி தவமிருந்த குளக்கரை என்பதாலும், தாமரை மலர்கள் நிறைந்த குளம் என்பதாலும், இக் குளம் கமலாலயம் எனப் பெயருற்றது. இதைக் கண்ணுற்ற ஹனுமன், சாளக்ராமக் கல்லைக் கீழே வைத்து விட்டு மஹாலட்சுமியை சேவிக்க சென்றார். குளத்தருகே ஹனுமனின் காலடி காணப்படுகிறது. ஹனுமன் திரும்பி வந்து சாளக்ராம கல்லை எடுக்க முயற்சித்து தோல்வியுற்றார். கீழே வைக்கப்பட்ட சாளக்ராமக் கல் பெரிய மலையாக வளர்ந்துவிட்டது. அதுவே நாமக்கல் மலை. நான் இங்கேயே கோயில் கொள்ளப் போகிறேன் - என்னை தியானித்து நீயும் இங்கேயே இரு என பகவான் கூற, ஹனுமனும் இங்கேயே கோவில் கொண்டார் என ஸ்தல வரலாறு. பரம்பொருளே மலையாக இருப்பதால், இங்கு தனக்கு விதானம் அமைக்க ஆஞ்சநேயர் உத்தரவு தரவில்லை எனக் கூறப்படுகிறது.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ நரசிம்மஸ்வாமி மேற்கே திருமுக மண்டலம் கொண்டு வீராசனமாக அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். வலது கால் தரையில் ஊன்றி, இடது கால் மடியில் வைத்து காட்சி தருகின்றார். மலையைக் குடைந்து இந்த சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர். ஹிரண்ய சம்ஹாரம் முடித்து இங்கு சாந்தி அடைந்ததாக ஐதீகம். நரசிம்மர் சந்நிதியிலிருந்து பார்த்தால் ஆஞ்சநேயர் அவரை நோக்கி பிரார்த்தனை புரிவது தெரிய வரும். வடக்கே ஸ்ரீ வைகுண்டநாதர் ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இரண்டு புறமும் பிரம்மபுத்ரர்களான சனகர் - சனாதனர் நிற்கின்றனர். மேலே சூரிய - சந்திரர்கள் சாமரம் வீசியபடி காணப்படுகின்றனர். திருவடிகளருகே மார்க்கண்டேயர், பூமா தேவி, நரசிம்மர் ஆகியோர் உள்ளனர். இரண்டு பக்கங்களிலும் சிவபெருமானும், பிரம்ம தேவரும் காணப்படுவதால் த்ரிமூர்த்தி க்ஷேத்ரம் என்பார்கள். தாயார் தனிக்கோவில் கொண்டுள்ளார். ஸ்ரீ நாமகிரித் தாயார் எனும் திருநாமம். மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஸ்ரீ நரசிம்மரை தரிசித்தவாறு தவக்கோலத்தில் அமர்ந்துள்ளார். நம்மிடம் பேசுவது போன்ற தோற்றம். மிகுந்த வரப்பிரசாதி. வெளி வாயிலில் கம்பத்தடியான் என்ற க்ஷேத்ரபாலகர் காணப்படுகிறார். குகைக் கோவிலில் ஹிரண்ய - நரசிம்ம யுத்தம், வராஹ அவதாரம், மஹாபலி கதை, ஹிரண்ய சம்ஹாரம் போன்ற சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. ஓங்கி உலகளந்தவரும் - வாமனரும், மஹாபலி சக்ரவர்த்தியும் சுக்ராச்சாரியாரும், நான்கு வேதங்களை மூக்கில் தூக்கிக் கொண்டு வரும் வராஹ அவதார சிற்பம், அபய நரசிம்மர் - உக்ர நரசிம்மர் ஆகிய சிற்பங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம். மலையின் வலது பக்கத்திலுள்ள பேட்டையில் மலையடிவாரத்திலுள்ள ரங்கநாதர் கோவிலைப் பற்றிய விபரங்கள் தனியாக தரப்பட்டுள்ளன (ரங்கநாதர்கோவில் என்று பார்க்கவும்)
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.