அருள்மிகு நாவலடி கருப்பண்ண ஸ்வாமி திருக்கோவில் (மோகனூர்)

God Name : நாவலடி கருப்பண்ண ஸ்வாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

ராணிப்பேட்டை

Call : +91-

வியாபார விஷயமாக இவ்வூருக்கு வந்த வணிகர்கள், இவ்வூரில் தங்கியிருந்தனர். அவர்களது பசுமாட்டையும் கன்றையும் மேய விடுவது வழக்கம். அப்படி மேயச் சென்ற பசுமாடு பால் கறப்பதற்கு முன்னரேயே வற்றிப்போன மடியுடன் திரும்பும். இதை கண்காணிக்கச் சென்ற வணிகர்கள், அருகிலுள்ள காட்டில் வளர்ந்திருக்கும் நாவல் மரத்தடிப் புதரில் தானாகவே பால் சொரிந்து கொண்டிருந்த பசுவைக் கண்டதும் புதரை கிளறிப் பார்த்துள்ளனர். அதனடியில் கல் ஒன்று இருந்ததைக் கண்டனர். அந்த தெய்வீகக் கல்லை வெளிக்கொணர்ந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். அந்தப் பசுவை தானமாகக் கொடுத்து விட்டனர். நாவல் மரத்தடியில் சுயம்புவாகக் கிடைத்ததால் நாவலடியான் என்ற பெயர் கொண்டார். இவர் சிறந்த நீதிபதியாகத் திகழ்வதால் பக்தர்கள் தங்களது குறைகளை இவரிடம் தெரிவித்து பரிகாரம் தேடிக் கொள்கின்றனர். பிரார்த்தனைச் சீட்டு எழுதி கட்டும் சம்பிரதாயம் உள்ளது. மெடிக்கல் ரிப்போர்ட்ஸ், எக்ஸ்ரே போன்றவற்றையும் கட்டித் தொங்க விடுகின்றனர்.
மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ செல்லாண்டியம்மன் இவ்வூரின் காவல் தெய்வமாக வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள். சாந்தமும் கருணையும் கொண்டு உருவான அழகு தெய்வம். அம்மனை நோக்கியபடி ஒரு பெரிய வெண்கலக் குதிரையும், 30 அடி உயரம் கொண்ட 2 பிரம்மாண்டமான குதிரைகளும் வெளியே நிற்கின்றன. வெளியே பூத கணங்களும், கன்னிமார்களின் திருவுருவங்களும் இருக்கின்றன. பெரிய மரக்குதிரையில் அமர்ந்து மீசையை முறுக்கி விட்டபடி கம்பீரமாகக் காட்சி தரும் வரப்பிரசாதியான நாவலடி கருப்பண்ண ஸ்வாமி மிகவும் சக்தி வாய்ந்தவர். பட்டமரத்தான், நீதிபதித்துரை ஆகிய பெயர்களைக் கொண்டவர். உற்சவ மூர்த்தம் மிகவும் அழகாக உள்ளது. எதிரே பெரிய வேல் ஒன்றை நட்டு வைத்துள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.