அருள்மிகு ஸ்ரீ கதிர் நரசிங்கப் பெருமாள் திருக்கோவில் (தேவர்மலை)
God Name : ஸ்ரீ கதிர் நரசிங்கப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
மதுரை
Call : +91-
ஹிரண்ய வதம் முடித்து திரும்பும் ஸ்ரீ கதிர் நரசிங்கப் பெருமாளை தேவர்களும் முனிவர்களும் வழிமறித்ததால் தேவர் மறி எனப் பெயர்பெற்று, பின்னர் மருவி தேவர்மலை என்றானது. உக்கிரமாக இருந்தவரை ரிஷிகள் சாந்தப்படுத்தி, இங்கு கோயில் கொள்ளுமாறு வேண்டியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ கதிர் நரசிங்கப் பெருமாள் கிழக்கே திருமுகம் கொண்டு அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சங்கு - சக்கரம் ஏந்திய மேற்கரங்கள், பக்தர்களை வா என அழைக்கும் தோரணையில் ஆஹ்வான ஹஸ்தம் மற்றும் பக்தர்களை காக்கும் அபய ஹஸ்தம் என கீழ்க்கரங்கள் ஆகிய சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. நெற்றிக்கண் உள்ளதால் திரிநேத்ரதாரி. பிரதோஷ காலத்தில் இவரை 11 முறை சுற்றி வந்தால் காரிய சித்தி கிட்டும். தனிச் சந்நிதியில் தாயார் கமலவல்லி எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். மகா மண்டபத்தில் ஸ்ரீ லட்சுமி நாராயணரை சேவிக்கலாம். நாகர்களின் சிலா வடிவங்களும் வாகனங்களும் உள்ளன. பிரகார வலச்சுற்றில் உற்சவ மூர்த்திகளையும், ஆழ்வாராதிகளையும், ஸ்ரீ ராமாநுஜரையும் சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.