அருள்மிகு கல்யாண வெங்கடரமண ஸ்வாமி திருக்கோவில் (தான்தோன்றிமலை)

God Name : மூலவர்: கல்யாண வெங்கடரமண ஸ்வாமி் உற்சவர்: கல்யாண ஸ்ரீநிவாசப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

மதுரை

Call : +91-

சுஷர்மா எனும் அந்தணர்க்கு திருப்பதி வேங்கடவனாக சேவை சாதிக்க வேண்டி, பாறை வெடித்து, ஒளிப் பிழம்பாகத் தோன்றி, காட்சி தந்ததால் இத்தலம் தான்தோன்றிமலை எனப் பெயர் பெற்றது. புங்கணாச்சாரி எனும் சிற்பியின் மகன் குண்டலாச்சாரி, தனது தாயின் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காக, திருப்பதி செல்ல முடியாமல் தவிப்பது கண்டு, அவளது பிரார்த்தனைகள் நிறைவேற, இரவு நேரங்களில் மலையைக் குடைந்து இந்தக் குடைவரைக் கோவிலை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. பெருமாளுக்கு செம்மாளி (செருப்பு) சமர்ப்பணம் செய்தலையும், சந்தனக் காப்பு மற்றும் திருக்கல்யாணம் ஆகியவற்றையும் பிரார்த்தனையாகச் செய்கின்றனர். நெடுங்காலமாக கூட்டுப் பிரார்த்தனையே நடந்து வருகிறது. எத்தனை சேவார்த்திகள் திருமஞ்சனத்திற்கு ஏற்பாடு செய்திருந்தாலும், அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கூட்டுப் பிரார்த்தனையாக மேற்கொள்கின்றனர்.
மூலவர்: கல்யாண வெங்கடரமண ஸ்வாமி் உற்சவர்: கல்யாண ஸ்ரீநிவாசப் பெருமாள். ஐம்பதடி உயரம் கொண்ட பாறை மீது அமைந்துள்ள குடைவரைக் கோவில் இது. படிகள் அதிகமில்லை என்பதால் ஏறுவதற்கு சிரமம் ஏதுமில்லை. மூன்று புறங்களிலும் பாதை கொண்ட சிறிய மலை இது. மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ கல்யாண வெங்கடரமண ஸ்வாமி மேற்கே திருமுக மண்டலத்துடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி அருள்புரிகின்றார். ஏழடி உயரமும் நான்கடி அகலமும் கொண்ட அழகான திருமேனியாக கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். பாறையில் புடைப்புச் சிற்பமாக எழுந்தருளியுள்ளார். நெரூர் சதாசிவ பிரம்மேந்த்ராள் அவர்கள் யந்திர ஸ்தாபனம் செய்து ஆராதித்துள்ளார். உற்சவ மூர்த்தியாக ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். தாயார் சந்நிதி இல்லை. கருவறை வாசலின் மேல்சுவரில் காணப்படும் பூதகணங்கள் இசைக்கருவிகளை வாசிப்பது போன்ற சிற்பங்கள் அழகாக அமைந்துள்ளன. மூலவருக்கு தினமும் 11.30 மணி அளவில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.