அருள்மிகு பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோவில் (வெண்ணைமலை)
God Name : ஸ்ரீ பாலசுப்ரமண்ய சுவாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
மதுரை
Call : +91-
இக்குன்றில் வழவழப்பான வெண்மையான பாறைகள் இருப்பதனாலும், காமதேனுப் பசு தன்னால் படைக்கப்பட்ட உயிர்களுக்கு வெண்ணையை உண்டாக்கி மலை போல் குவித்து வைத்ததாலும், இம்மலை வெண்ணைமலை எனப் பெயர் கொண்டது. குன்றின் மீது ஏற கருங்கல் படிக்கட்டுகள் அமைத்துள்ளனர். வெண்ணைமலை அருகே காமதேனுப் பசு உண்டாக்கிய தேனு தீர்த்தம் உள்ளது. பகவான் எனும் யோகிக்கு ஞானக் கண்ணால் காணும்படி முருகப் பெருமான் காட்சி தந்தருளியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ பாலசுப்ரமண்ய சுவாமி எழுந்தருளியுள்ளார். யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மயில் இல்லாமலும், வள்ளி - தெய்வானை தேவியர்கள் இல்லாமலும், தன்னந்தனியாக தண்டபாணியாகக் காட்சி தருவது வித்தியாசமான கோலம். வலச்சுற்றில் விசாலாட்சி சகித காசி விஸ்வநாதர் சந்நிதி கொண்டுள்ளார். கருவூரார் சித்தர் சந்நிதி தனியாக உள்ளது. யோகி பகவான் என்பவர் இம்மலையில் தியானத்தில் இருந்தபோது அவருக்கு முருகன் தரிசனம் தந்ததாக ஐதீகம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.