அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோவில் (மதுக்கரை)
God Name : இல்லை
திருக்கழுக்குன்றம் கோவில்
மதுரை
Call : +91-
சேர - சோழ - பாண்டிய மன்னர்களிடையே எல்லைத் தகராறு அடிக்கடி ஏற்படுமாம். மலை ஜாதிப் பெண்ணாக வந்த பார்வதி தேவி, மூவேந்தர்களை ஒரு பொது இடத்தில் அமரச் செய்து, "இங்கிருந்து கிழக்கே சோழ நாட்டு எல்லை, மேற்கே சேர நாட்டு எல்லை, தெற்கே பாண்டிய நாட்டு எல்லை" எனத் தீர்ப்புக் கூறினாள். அதை மூவரும் ஏற்றுக் கொண்டனர். வந்திருப்பவள் சாட்சாத் பரமேஸ்வரி என உணர்ந்த மூவரும், தீர்ப்புக் கூறிய இடத்திலேயே அன்னையை கோவில் கொள்ளுமாறு பிரார்த்தித்தனராம். சோழ நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது, தலையை மட்டும் கிழக்கு நோக்கித் திருப்பி பஞ்சத்தைப் போக்கினாள் எனக் கூறப்படுகிறது. எல்லைப்பகுதியை நீண்ட மதில்கரை போல அமைத்திருப்பதினால், 'மதில்கரை' என்றிருந்து பின்னர் 'மதுக்கரை' என்றானதாகக் கூறப்படுகிறது.
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள செல்லாண்டியம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். வடகிழக்கு திசை நோக்கி சிம்ம வாகனத்தில் கம்பீரமாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். பேச்சியம்மன், கன்னிமார்கள், மதுரை வீரன், காத்தவராயன் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். பிரகார சுற்றில் உள்ள அரச மரத்தடியில் வலம்புரி விநாயகர் எழுந்தருளி ஆசி வழங்குகிறார். கிழக்கு வாசலில் காவல் தெய்வமாக எழுந்தருளியுள்ளார் சந்தனக் கருப்பர். சாட்டையை சுழற்றியபடி குதிரையுடன் காணப்படுகிறார். அங்கிருந்து 18 படிகள் நதிக்கரையை நோக்கி இறங்கினால், ஆற்றங்கரை ஓரமாக உள்ள ஆலமரத்தடியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.