அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோவில் (மாமுண்டி)
God Name : நல்லாண்டவர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
தல வரலாறு: இத்தலத்தில் பூர்வீக தெய்வமாக இருந்த பொந்துப்புளி கருப்பரை சாட்சியாக வைத்து ஊருக்குப் பல நற்காரியங்களைச் செய்து வந்தார் மாமுண்டி. இங்குள்ள தடாகத்தில் பௌர்ணமி தோறும் நீராட வந்திருந்த சப்த கன்னியர்களைக் கயவர்கள் சிலர் பிடித்துக்கொள்ள, அவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற குதிரை வீரராக வந்தார் மாமுண்டி. இதனால் அவர்கள் மாமுண்டியைப் பாராட்டி "நல்ல அண்ணன்" என்று அழைத்தார்கள். வயது முதிர்ந்த மாமுண்டி, பூலோக வாசம் முடியும் தருவாயில் இங்கு ஜீவசமாதி அடைந்தார். இங்குள்ள மக்களுக்கு இவர் தெய்வமாக இருந்து பல நன்மைகளைச் செய்ததால் இவரை நல்லாண்டவர் என்று அழைக்கிறார்கள்.
மூலஸ்தானத்தில் மூலவராக அமர்ந்துள்ள நல்லாண்டவர் மிகுந்த வரப்பிரசாதி. அமைதியான திருமுகம், பெரிய மீசை, காந்த சக்தி கொண்ட கண்கள் ஆகியவற்றுடன் கூடிய அழகான சுதை வடிவமாக கொலுவீற்றிருக்கிறார். கிழக்கு பார்த்த சந்நிதி. மணப்பாறை மற்றும் சுற்றுப்புற கிராமத்தினர் அனைவருக்கும் இவர்தான் நீதியரசர். எந்த விதமான பிரச்சினைகளைக் கொண்டு வந்தாலும் தீர்வு சொல்பவர் எனப் போற்றுகிறார்கள். ஒண்டி கருப்பு, சப்பாணி கருப்பு, சங்கிலி கருப்பு, மலையாள கருப்பு போன்ற ஏழு கருப்புகளை ஒரே சந்நிதியில் காணலாம். இரண்டு புறமும் முறுக்கிய மீசையுடன் முனீஸ்வரர்களை தரிசிக்கலாம். இவ்வாலயத்தின் ஆதிதெய்வமான பொந்துப்புளி கருப்பு, சப்த கன்னியர்கள், லாட சந்நியாசி, கடாவெட்டுக் கருப்பர், பேச்சியம்மன் ஆகிய திருவுருவங்களையும் தரிசிக்கலாம். ஓம்கார விநாயகர் சிலை அழகாக இருக்கிறது. நுழைவாயிலிலேயே பிரமிக்க வைக்கும் பிரம்மாண்டமான குதிரைகள் மற்றும் யானைகளின் சிலைகளைக் காணலாம். பரிவாரங்களுடன் மதுரை வீரனைத் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.