அருள்மிகு ராஜ ராஜேஸ்வரி திருக் கோவில் (சோழமாதேவி)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
வேப்ப மரங்களடர்ந்த சோலையில், உயர்ந்து ஓங்கிய ஆலமரத்திற்கும், நாகமிருக்கும் புற்றுக்கும் இடையில் அமைந்துள்ள ஆலயம். வடக்கே, உய்யக்கொண்டான் ஆற்றினருகே உள்ள ஆலமரத்தடியில், ஒரு ஜோதி மண்டபம் உள்ளது. இதில் சத்குரு சம்ஹார மூர்த்தி எனும் மகான் தவம் செய்ததாகக் கூறுகிறார்கள். இங்கு அணையா விளக்கை ஏற்றி வழிபடுகிறார்கள். கல்வெட்டுகளில், இத்தலம் தென்கரை பிரம்மதேய ஸ்ரீ சோழமாதேவி சதுர்வேதி மங்கலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ராஜ ராஜ சோழ சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட ஆலயம் என்பார்கள்.
மூலஸ்தானத்தில் எழுந்தருளி அருள் புரியும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி மிகுந்த வரப்பிரசாதியாகப் போற்றப்படுகிறாள். அருளே வடிவானவள். ஏகதள விமானம் கொண்ட கருவறையில், அழகே உருவாக எழுந்தருளி, தரிசனம் தருகின்றாள். அம்மனின் திருக்கரத்திலுள்ள முடிக்கயிற்றை வாங்கி பிரார்த்தித்து கையில் கட்டிக் கொண்டால் திருஷ்டிகளும் தோஷங்களும் நீங்கிவிடும். க்ஷேத்ரபாலகராக அய்யனார் மற்றும் கேது திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம் என்கிறார்கள். பிரகார வலச்சுற்றில் காணப்படும் பாம்பு வடிவ சிற்பம் அருகே ஒரு துவாரம் உள்ளது. அதன் வழியே ஒரு பாம்பு கருவறைக்குள் சென்று வழிபடும் என கூறுகிறார்கள். ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கைலாசநாதர் கோவிலும் ஒன்று இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.