அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோவில் (திருவெறும்பூர் - எறும்பியூர்)

God Name : எறும்பீஸ்வரர் எனப்படும் பிப்பிலீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

ராவணனின் ஒன்றுவிட்ட சகோதரரான கரன் மற்றும் அவனது மற்ற சகோதரர்கள், தாரகாசுரன் போன்ற அசுரர்களின் கொடுமைக்கு உள்ளான தேவர்கள் மிகுந்த துன்பமடைந்து இவ்விறைவனிடம் முறையிட்டு வழிபட்டு வந்தார்கள். கரனுக்குத் தெரியாமலிருக்க, எறும்பு வடிவம் கொண்டு தேவர்கள் இங்கு இறைவனைப் பூஜித்து வந்தனர். இதனால் இறைவனுக்கு எறும்பீஸ்வரர் என்ற திருநாமம். லிங்கத் திருமேனியில் எண்ணெய் பசை இருப்பதால் எறும்புகளால் மேலேறி வந்து பூஜை செய்ய முடியாதே என்று தனது திருமேனியை சொரசொரப்பாக புற்று வடிவத்தில் மாற்றிக் கொண்டார் இறைவன். எறும்புகள் ஏறுவதற்கு வசதியாக திருமேனியை சாய்வாக வைத்துக் கொண்டார். லிங்கத்திருமேனி மீது எறும்புகள் ஊர்ந்து சென்றதால் உண்டான தடயங்களாக திருமேனி பள்ள மேடுகளுடன் சாய்ந்து காணப்படுகிறது. அகஸ்தியருக்கு முருகன் ஞான உபதேசம் செய்த ஸ்தலம். 150 அடி உயரமுள்ள சிறிய குன்றின் மீது 90 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். ஆதித்ய சோழன் கட்டிய கோவில் எனக் கூறப்படுகிறது.
மூலவர்: எறும்பீஸ்வரர், அம்பாள்: நறுங்குழல் நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் எறும்பீஸ்வரர். வட்ட வடிவமான ஆவுடை கொண்ட அழகிய லிங்க மூர்த்தம். சுயம்பு லிங்கம். கிழக்கு பார்த்த சந்நிதி. லிங்கத் திருமேனி சற்று வடபுறமாக சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. திருமேனிக்கு புனுகு சட்டம் சாத்துகின்றனர். அபிஷேகம் கிடையாது. வடமொழியில் பிப்பிலீஸ்வரர் என்பார்கள். (பிப்பிலி - எறும்பு). வன்மீகேஸ்வரர் எனும் திருநாமமும் உண்டு. தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் நறுங்குழல் நாயகி எனப்படும் சௌரப்ய குந்தளாம்பாள் காட்சி தருகின்றாள். அழகே உருவான தோற்றம். கோஷ்ட மூர்த்தங்களுள் ஹரிஹரனின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. பிள்ளையார், முருகன் மற்றும் அநேக பரிவாரத் தேவதைகளை தரிசிக்கலாம். பாறையில் குடைந்தெடுக்கப்பட்ட பிரகாரங்கள் மற்றும் அழகிய 12 கால் மஹாமண்டபம் காணலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.