அருள்மிகு ரத்னகிரீஸ்வரர் திருக்கோவில் (முத்தரசநல்லூர்)

God Name : ரத்னகிரீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

முத்தரசன் எனும் குறுநில மன்னனின் கனவில் தோன்றி இறைவன் விவரித்தபடி, வன்னி மரத்தடியில் புதையுண்டிருந்த விக்ரஹங்களை வெளிக் கொணர்ந்து பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பியதாக ஸ்தல வரலாறு. இதனால் இவ்வூர் அவனது பெயரிலேயே முத்தரசநல்லூர் என வழங்கப்படலாயிற்று. கடம்பவனேஸ்வரர், ரத்னகிரீஸ்வரர் ஆகியோரை தினமும் வழிபடும் பழக்கமுள்ள முத்தரசனுக்கு உடல் நிலை சரியாக இல்லாது போனதால், அவர்களை தரிசிக்க முடியவில்லையே என ஏங்கிய முத்தரசனுக்காக, அவர்களாகவே இங்கு வந்து எழுந்தருளியிருப்பதாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீரத்னகிரீஸ்வரர். கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் ஆராளகேஸ்வரி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். அழகிய கோஷ்ட மூர்த்தங்கள். விநாயகர், முருகன், கால பைரவர், நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். கடம்பவனேஸ்வரர், பால குஜாம்பாள் ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.