அருள்மிகு சுப்ரமண்யஸ்வாமி திருக்கோவில் (குமாரவயலூர்)
God Name : மூலவர்: ஸ்ரீ ஆதிநாதர், சிறப்பு மூர்த்தம்: வயலூரான் - முருகன்
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
பயிர்களை அழிக்கும் விலங்குகளை வேட்டையாடச் சென்ற சோழ மன்னன் ஒருவன் இவ்வூர் வயல்கள் வழியே செல்லும்போது தாகம் ஏற்பட்டது. அங்கு விளைந்திருந்த கரும்பு ஒன்றை பிடுங்கினான். மூன்று தோகைகளுடன் கூடிய அந்த கரும்பை வெட்ட முற்பட்டபோது அதிலிருந்து ரத்தம் பெருகியது.
கவலையுற்ற மன்னன் கரும்பு வளர்ந்திருந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தான். சிவலிங்கம் புதையுண்டிருப்பது தெரிய வந்தது. அதை வெளிக் கொணர்ந்து பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பியதாக வரலாறு.
விராலிமலையில் இருந்த அருணகிரிநாதரை வயலூர்க்கு வா என அழைத்த முருகன் திருப்புகழ் பாடும்படி பணித்தான். மயில், வடிவேல், கடம்ப மலர், சேவற்கொடி, திருவடி, பன்னிரு கரங்கள், வயலூர் ஆகியவற்றை வைத்து அருணகிரியார் பாடியதாக வரலாறு.
அக்னி இறைவனை வழிபட்டதால் மூலவர்க்கு அக்னீஸ்வரர் என்றொரு திருநாமம். முருகன் தனது தேவியர்களுடன் தாய் - தந்தையர்களான பார்வதி - பரமேஸ்வரனை வழிபட்ட ஸ்தலம். கிருபானந்தவாரியார் திருப்பணிகள் பல செய்த ஸ்தலம்.
பால்குடம் தூக்கி வருதல், தேரோட்டம், தெப்ப உற்சவம் ஆகிய விழாக்களுடன் விசேஷமாக தொடங்கும் பிரம்மோற்சவம் வைகாசி மாதத்தில் 12 நாட்கள் சிறப்புற நடக்கும். ஆனியில் அருணகிரிநாதர் விழா. ஐப்பசியில் கந்த சஷ்டி பெரு விழா 7 நாட்கள் நடைபெறும். சூர சம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகியன நடத்திக் காட்டுவர். தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர விழாக்கள் சிறப்புற நடக்கின்றன.
மூலவர்: ஸ்ரீ ஆதிநாதர், அம்பாள்: ஸ்ரீ ஆதி நாயகி, சிறப்பு மூர்த்தம்: வயலூரான் - முருகன்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ ஆதிநாதர். அக்னீஸ்வரர், விடங்கமுடையார், குமாரர் பூஜித்த நாதர் ஆகிய திருநாமங்களும் இவருக்கு உண்டு. அழகிய சிவலிங்கத் திருமேனிக்கு வெள்ளிக்கவசமும் நாகாபரணமும் கொண்டு அலங்கரித்துள்ளனர். கிழக்கு நோக்கிய சந்நிதி.
தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் ஸ்ரீ ஆதிநாயகி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். மிகுந்த வரப்பிரசாதி.
மூலவர் சந்நிதிக்கு செல்லும் முன்பாக உள்ள மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜர் ஊன்றிய பாதமும், தரையில் பாத நுனியை பதித்த மற்றொரு பாதமும் கொண்டு, சதுர தாண்டவம் ஆடும் நாயகனாக தரிசனம் தருகின்றார். இரண்டு குதிகால்களையும் ஒருசேர குவித்து பீடத்தின் மீது ஆடும் கோலம். விரிசடை, திருவாசி எதுவுமில்லை. பாதத்தினடியில் முயலகன் இல்லை. வித்தியாசமான கோலம்.
கையில் கனி வைத்துள்ள ஸ்ரீ பொய்யா கணபதி அழகாக இருக்கின்றார். இவரது முன்பாக நின்று அருணகிரிநாதர் 'கைத்தல நிறை கனி' எனும் பாடலைப் பாடியுள்ளார்.
சிறப்பு மூர்த்தமான வயலூரான் சந்நிதியில் ஒரு முகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு ஸ்ரீ சுப்ரமண்யஸ்வாமி எழுந்தருளியுள்ளார். வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். சந்நிதியின் இடது - வலது - மற்றும் நேராக - எந்தப் பக்கமாக நின்று பார்த்தாலும் முருகன் நம்மைப் பார்ப்பது போன்றே இருக்கும். வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தூண்டும் அழகு. மயில் வாகனம் தெய்வயானையின் பக்கம் திரும்பி நிற்பது விசேஷம். தேவேந்திர மயில் என்பார்கள்.
ஸ்ரீ முத்துக்குமர சுவாமி மற்றும் சதுர தாண்டவ நடராஜர் ஆகிய உற்சவ மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன.
வலச்சுற்றில் நர்த்தன விநாயகர், மயில் மீதமர்ந்த முத்துக்குமார சுவாமி, அய்யனார், நால்வர், பிடாரி அம்மன், தட்சிணாமூர்த்தி, அருணகிரிநாதர், மஹாலட்சுமி, சூரியன், நவகிரகங்கள், வாரியாரின் திருவுருவம் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம்.
உஷா தேவி, சாயா தேவி ஆகிய தேவியர்களுடன் நின்ற கோலத்தில் சூரியனும் மற்ற கிரகங்கள் சூரியனைப் பார்த்தபடியும் காட்சி தருகின்றனர்.
முருகன் தனது வேலால் உருவாக்கிய அக்னி தீர்த்தம் எனப்படும் சக்தி தீர்த்தம் உள்ளது.
இத்தலத்தில் சண்முகார்ச்சனை செய்வது விசேஷம் என்பார்கள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.