அருள்மிகு ஸ்ரீ உய்யக் கொண்டார் திருக்கோவில் (திருக்கற்குடி)

God Name : ஸ்ரீ உய்யக் கொண்டார்

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

கல்லில் (மலையில்) இறைவன் குடி கொண்டுள்ளதால் இவ்வூர் கற்குடி என்றழைக்கப்படுகிறது. ராவணனின் ஒன்றுவிட்ட சகோதரனான கரன் வழிபட்ட மலை என்பதால் கரகுடி எனப் பெயர் பெற்று, பின்னர் கற்குடி ஆகியிருக்கக் கூடும் என்றும் கூறுவர். உயிர்களை உய்விக்கும் நாதர் என்பதால் 'உய்யக்கொண்டார்' என்றும் 'உஜ்ஜீவனநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார். புத்திரபாக்கியம் வேண்டும் என்று தவமிருந்து சிவபெருமானிடம் வேண்டிய ம்ருகண்டு முனிவருக்கு, 16 வயது வரையே ஜீவித்திருக்கும் ஞானபுத்திரனாக மார்க்கண்டேயனைத் தந்தார் சிவபெருமான். 14 வயது வந்ததும் பிள்ளையைச் சீக்கிரத்தில் இழந்துவிட விரும்பாத முனிவரின் கவலையைப் போக்க பல சிவஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டான் மார்க்கண்டேயன். இத்தலம் வந்து வழிபட்டதும் அவனுக்கு, உமையவளுடன் காட்சி தந்தார் இறைவன். யமனிடமிருந்து அவனைக் காப்பாற்றுவதாக வாக்களித்தார். மார்க்கண்டேயனது ஆயுளை உய்வித்தவர் என்பதனால் 'உய்யக்கொண்டார்' என்ற பெயரைக் கொண்டார். பெருமானின் சந்நிதி மேற்கு நோக்கி இருப்பினும், யமனுக்குரிய திசை தெற்கு என்பதால், அவனுடைய வழியில் சென்று அவனை வரவிடாமல் தடுத்து நிறுத்த முற்பட்டதால், பெருமானின் திருவடிச் சுவடுகள் தெற்குச் சுற்றில் கொடிமரத்தருகே காணப்படுகின்றன. யமபயம் இல்லாதிருக்கும் பொருட்டு, தெற்கே கொடிமரமும், மழு முதலிய படைகளும் வைக்கப்பட்டுள்ளன. உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் உள்ளவர்கள், இவ்விறைவனைப் பிரார்த்தித்து, பானக நைவேத்தியம் செய்து, கொடிமரத்தருகே வைத்து விநியோகம் செய்கின்றனர். அஞ்சனாட்சியின் கையிலுள்ள மலர் உடைந்து பின்னமடைந்திருந்ததால், புதிய சிலை ஒன்றைச் செய்து 'பாலாம்பிகை' எனப் பெயரிட்டுப் பிரதிஷ்டை செய்தனர். ஆனால் அஞ்சனாட்சியோ, ஊர் பெரியவர்களின் கனவில் தோன்றி, தாம் இங்கேயே இருக்க விரும்புவதாகத் தெரிவித்தாளாம். அதனால் இங்கு இரண்டு அம்பாள் சிலைகள் உள்ளன. ராஜராஜ சோழனின் தமக்கை குந்தவை நாச்சியார் இத்தலத்தில் தொடர்ந்து அன்னதானம் செய்து வந்ததாகக் குறிப்பொன்று கூறுகிறது. அன்றாடப் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு பெற வேண்டி, பக்தர்கள் அன்னதானம் செய்வதைத் தொடர்கின்றனர். தேவாரத்திருத்தலம்.
மூலவர்: ஸ்ரீ உய்யக் கொண்டார்் அம்பாள்: ஸ்ரீ மைவிழியம்மை, ஸ்ரீ பாலாம்பிகை (இரண்டு). ஒரு சிறு குன்றின் மீது (50 அடி) ஆலயம் அமைந்துள்ளது. 100 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ உய்யக் கொண்டார். வடமொழியில் 'உஜ்ஜீவனநாதர்' எனும் திருநாமம். முக்தீசர், கற்பகநாதர், உச்சிநாதர் ஆகிய பெயர்களும் உண்டு. உயரமான அழகிய பாணமும், சதுரபீட ஆவுடையாரும் கொண்ட கம்பீரமான திருமேனி. சுயம்பு லிங்க மூர்த்தம். பெருமானின் திருமுடியில் இரண்டு சிறிய குழிகள் காணப்படுகின்றன. மேற்கு நோக்கிய சந்நிதி. கொடிமரத்தின் முன் பெருமானின் பாதச்சுவடுகளைத் தரிசிக்கலாம். கொடிமரத்தருகே உள்ள மேற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் ஸ்ரீ மைவிழியம்மை எழுந்தருளியுள்ளார். வடமொழியில் ஸ்ரீ அஞ்சனாட்சி என்று அழைக்கப்படுகிறார். சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. பெரிய கண்களையும், மை தீட்டப்பட்ட கண்களையும் கொண்ட சாந்தமான திருமுகம். மூலவரின் சந்நிதிக்குச் செல்லும் வழியில் உள்ள கிழக்கு நோக்கிய சந்நிதியில் இரண்டாவது அம்பாள் ஸ்ரீ பாலாம்பிகை எழுந்தருளி தரிசனம் தருகிறாள். கோஷ்ட மூர்த்தங்கள் யாவும் அழகாகக் காட்சியளிக்கின்றன. நடராஜர் சபை மற்றும் உற்சவ மண்டபத்திலுள்ள உற்சவத் திருமேனிகள் கொள்ளை அழகுடன் காட்சியளிக்கின்றன. வலச்சுற்றில் வல்லபை உடனாய விநாயகர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, வள்ளி - தெய்வயானை உடனாய முருகன், ஜ்யேஷ்டா தேவி ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். வித்தியாசமான திருவுருவமாகக் காணப்படும் ஜ்யேஷ்டா தேவியின் அருகே இரண்டு குழந்தைகள். அவற்றுள் ஒன்று மாடன் எனப்படும் நந்திகேஸ்வரர், மற்றொன்று வாக் தேவதை. மார்க்கண்டேயர் சிலை நடராஜர் சந்நிதி அருகே உள்ளது. பிட்சாடனரின் திருவுருவம் பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது. ராவணனின் ஒன்றுவிட்ட சகோதரன் கரன் வழிபட்ட சிவலிங்கம் 'இடர்காத்தார்' எனும் திருநாமத்துடன் எழுந்தருளி தரிசனம் தருகிறார். வெளிப்பிரகாரத்தில் தனிச் சந்நிதியில் இவரைக் காணலாம். மலையடிவார மண்டபத்தையும், அதன் தெற்கில் ஞானவாவி எனும் திருக்குளத்தையும் காணலாம். 64 படிகள் ஏறி மலை மேல் சென்று பெருமானைத் தரிசிக்க வேண்டும்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.