அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோவில் (திருப்பாற்றுறை)

God Name : திருமூலநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

இத்தலத்தில் சிவபூஜை செய்து கொண்டிருந்த மார்க்கண்டேய முனிவர், அபிஷேகம் செய்ய பசும்பால் கிடைக்கவில்லையே என வருந்தினார். லிங்கத்திலிருந்தே பால் பெருகும்படி சிவபெருமான் அனுக்ரஹம் செய்தார். இதனால் இத்தலம் பாற்றுறை என அழைக்கப்படுகின்றது. வேட்டைக்கு சென்று கொண்டிருந்த சோழ அரசன், வெள்ளைப் பறவை ஒன்று புதரிலிருந்து வெளிப்பட்டு செல்வதைக் கண்டான். ஆர்வ மிகுதியில் புதரை தோண்டிப் பார்த்ததில் லிங்கம் ஒன்று புதையுண்டிருப்பது தெரிய வந்தது. தோண்டும் போது மண்வெட்டி பட்டதில் பால் பெருகியது. அந்த சிவலிங்கத்தை அரசன் வெளிக்கொணர்ந்து பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பியதாக வரலாறு.
மூலவர்: திருமூலநாதர், அம்பாள்: மேகலாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக திருமூலநாதர் எழுந்தருளியுள்ளார். ஆதிமூலேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் மேகலாம்பிகை எழுந்தருளி தரிசனம் தருகின்றார். நித்ய கல்யாணி என்றும் அழைக்கப்படுகிறாள். ராஜ கோபுர வாசலில் பிள்ளையார், முருகன், கருப்புசாமி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். கோஷ்ட மூர்த்தங்களுள் வீணா தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர் ஆகியோரின் திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன. பிரகார வலச்சுற்றில் அநேக மூர்த்தங்களை தரிசிக்கலாம். அர்த்த மண்டபத்தில் வேணுகோபாலர், சமயக் குரவர்கள், கைலாஸநாதர் ஆகியோரைக் காணலாம். இத்தலத்தில் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்வது விசேஷமாகும்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.