அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோவில் (ஸ்ரீரங்கம்)
God Name : ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
தில்லை மூவாயிரத்தார் கம்ப ராமாயணத்தை ஏற்றுக் கொண்டால்தான், ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றலாம் என இவ்வூர் பெரியவர்கள் அனுமதிக்க மறுத்தனர். காட்டழகிய சிங்கரை பிரார்த்தித்துக் கொண்டு, தில்லை சென்றார் கம்பர். மூவாயிரத்தாரின் தலைவன் மகனை பாம்பு கடித்து இறந்து விட்டிருந்த நேரத்தில், கம்பர் அரங்கேற்றம் குறித்து விவாதித்தது பிடிக்காமல் அவர்கள் கடிந்து கொண்டனர். உடனே கம்பர் ராம காவியத்தின் நாகபாச படல பாடல்களைப் பாட, இறந்த சிறுவன் உயிர் பெற்ற அதிசயம் நிகழ்ந்தது. பின்னர் அனைவரும் மனப்பூர்வமாக காவியத்தை ஏற்றுக் கொண்டதாகவும், அதன் பின் ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றியதாகவும் கூறுவர். கம்பராமாயண அரங்கேற்றத்தின் போது சிரக்கம்பம் செய்து ஆமோதித்த நரசிம்மமூர்த்தி, ஸ்ரீ மேட்டழகிய சிங்கராகப் பெரிய கோவிலில் எழுந்தருளியுள்ளார். விஜயதசமியன்று ரங்கநாதர் இங்கு எழுந்தருளி நாள் முழுவதும் சேவார்த்திகளுக்கு சேவை சாதித்து விட்டு, அன்று மாலை புறப்பட்டு வீதியிலுள்ள வன்னி மரத்திற்கு அம்பு எய்து, பின் திரும்பிச் செல்வதாக ஐதீகம். காலை 6.15 மணி முதல் காலை 7.45 மணி வரை - விஸ்வரூப தரிசனம்் காலை 7.45 மணி முதல் காலை 9.00 மணி வரை - பூஜா நேரம்் காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை - சேவா காலம்் மாலை 6.00 மணி முதல் மாலை 6.45 மணி வரை - சீரான்னம் (சேவை உண்டு)் மாலை 6.45 மணி முதல் இரவு 8.15 மணி வரை - சேவா காலம்் இரவு 8.30 மணிக்கு மேல் - செலவு சம்பா.
மூலஸ்தானத்தில் காட்டழகிய சிங்கராக எழுந்தருளி சேவை சாதிக்கும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி மிகுந்த வரப்பிரசாதி. மேற்கே திருமுக மண்டலத்தைக் கொண்டு அமர்ந்த கோலத்தில் சுயம்பு மூர்த்தமாக வீற்றிருக்கிறார். கோபம் அனைத்தும் நீங்கி, சாந்த ஸ்வரூபியாக மஹாலட்சுமியைத் தன் மடியில் இருத்தி, கொஞ்சும் பாவனையில் திருமகளுடன் வீற்றிருக்கின்றார் ஸ்ரீ நரசிம்மர். கஜானனர், யோக அனந்தர், யோக வராஹர், யோக நரசிம்மர், பெரிய திருவடி ஆகியோரைச் சேவிக்கலாம். ஜன்ம நட்சத்திரமான ஸ்வாதி நட்சத்திரத்தன்றும், பிரதோஷ காலங்களிலும் திருக்கோவில் அமர்க்களப்படும். தினசரி காலை 11 மணி முதல் 12 மணி வரை உச்சிகால திருமஞ்சனம் காண கூட்டம் நிரம்பி வழியும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.