அருள்மிகு ஸ்ரீ வெக்காளி அம்மன் திருக்கோவில் (உறையூர்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
உறையூரை ஆண்ட பராந்தக சோழனின் ராஜகுருவான சாரமாமுனிவர், ஒரு நந்தவனத்தை அமைத்து, அதில் செவ்வந்திப் பூக்களை வளர்த்து, தாயுமானவ சுவாமிக்கு நித்திய பூஜை செய்யப் பயன்படுத்தினார். அவை ராணிக்கு மிகவும் பிடித்தமான மலர்கள். ஒரு வணிகனும் அரசனின் ஆட்களும் தினமும் பூக்களைப் பறிக்கத் தொடங்கினர். இது குறித்து அரசனிடம் முறையிட்ட முனிவரை, அரசன் ஆணவத்தால் இகழ்ந்தான். முனிவர் தாயுமானவ சுவாமியிடம் முறையிட்டார். கோபமடைந்த சிவபெருமான் நெருப்பு மழையைப் பொழிவித்து, மன்னனின் கோட்டையை மண் மேடாக்கினார். ராணி புவன மாதேவி வெக்காளி அம்மனின் பக்தை என்பதால் உயிர் தப்பினாள். பாதிக்கப்பட்ட மக்கள் வெக்காளி அம்மனிடம் போய் பிரார்த்தித்தனர். அம்மன் முழு நிலவாக மாறி, கோபத்தைத் தணித்து மக்களைக் காப்பாற்றினாள். உத்தமச்சேரி எனும் இடத்தில் ராணியை ஒரு அந்தணர் காப்பாற்றினார். அவளுக்கு கரிகால் பெருவளத்தான் எனும் மகனும் பிறந்தான்.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ வெக்காளி அம்மன் யோக பீடத்தில் வடக்கு நோக்கி சுகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள். திரிசூலம், உடுக்கை, பாசம், அட்சய பாத்திரம் கொண்ட சதுர்புஜங்கள். சிவப்பு புடவையும், கபாலமாலையும், வெள்ளிக் காப்பும் அணிந்து காட்சி தருகின்றாள். உற்சவ விக்ரகம் மிகவும் அழகாக இருக்கின்றது. விமானம் ஏதுமில்லாமல், வானமே கூரையாகக் கொண்டு, வெயில் - மழை - பனி எதையும் பொருட்படுத்தாது அமர்ந்து அருள்பாலிக்கின்றாள். அம்மன் எதிரே உள்ள சூலத்தில் பிரார்த்தனைச் சீட்டுக் கட்டும் சம்பிரதாயம் உள்ளது. வல்லப விநாயகர், மயூர முருகன், காசி விஸ்வநாதர், காத்தவராயன், மதுரை வீரன், பெரியண்ணன் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள பொங்கு சனீஸ்வரர் மிகுந்த வரப்பிரசாதி. மங்கு சனி தசை நடப்பில் உள்ள பிரஜைகள், இவரை வேண்டி நற்பலன்கள் பெறுகின்றனர். வடக்கு நோக்கிய ஆலயம். வெள்ளிக்கிழமைகளில் கட்டணப் பிரார்த்தனை செய்பவர்களுக்கு தங்கக் கவசம் சாத்தப்படுகிறது. (காலை 10.30 -11.30 மணி) வைகாசி மாதக் கடைசி வெள்ளிக்கிழமையில் மாம்பழச் சாற்றில் அபிஷேகம் நடைபெறுகிறது. ஆவணி மாதத்தில் மகா சர்வ சண்டி ஹோமம் நடத்தப்படுகிறது. நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.