அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில் (உறையூர்)

God Name : பஞ்சவர்ணேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

இத்தலத்திற்கு வந்த பிரம்மா இவ்விறைவனை பூஜிக்கும்போது, வேளைக்கு ஒரு வர்ணமாக சிவபெருமான் இருப்பது கண்டு அவருக்கு பஞ்சவர்ணேஸ்வரர் எனும் பெயர் சூட்டினார். உதங்க மா முனிவரின் மனைவியான பிரபை என்பவள் கங்கையில் நீராடும்போது அவளை முதலைகள் கடித்து விட்டன. இதனால் மனம் நொந்து க்ஷேத்ராடனம் புறப்பட்டு சென்ற உதங்க முனிவர் இத்தலம் வந்து இங்குள்ள இறைவனை தரிசித்தபோது பஞ்சவர்ணம் காட்டியருளியதாக ஸ்தல வரலாறு. உதங்க முனிவர்க்கு - காலை வழிபாட்டின்போது ரத்ன லிங்கம், உச்சி காலத்தில் ஸ்படிக லிங்கம், மாலை நேரத்தில் பொன் லிங்கம், இரவு முதல் ஜாமம் வரை வைர லிங்கம், அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திர லிங்கம் என பஞ்ச வர்ண லிங்கங்களாக தரிசனம் தந்தார் சிவபெருமான். இப்போது இறைவன் சித்திர லிங்கமாகவே சாட்சி தருகின்றார். சோழ மன்னன் யானை மீது பவனி வந்துக் கொண்டிருந்தபோது யானைக்கு மதம் பிடித்து யாருக்கும் அடங்காமல் இருந்ததாம். அப்போது கோழி ஒன்று பறந்து வந்து யானையின் மத்தகத்தில் அமர்ந்து தனது மூக்கால் கொத்தி, யானையின் திமிரை அடக்கியதாம். இதனால் இவ்வூர் கோழியூர் என்ற பெயரைக் கொண்டது. எங்கு சிவ தரிசனம் செய்தாலும், எங்கு சிவ பூஜை செய்தாலும் இங்குதான் வந்து உறையும் என்பதால் இவ்வூருக்கு உறையூர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. கோச்செங்கட் சோழன் கட்டிய 78 மாடக் கோவில்களுள் ஒன்று. புகழ் சோழ நாயனார் அவதரித்த ஸ்தலம். அவரது திருவுருவம் ஒன்றும் இருக்கின்றது. தேவாரத்திருத்தலம்
மூலவர்: பஞ்சவர்ணேஸ்வரர், அம்பாள்: காந்திமதியம்மை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் பஞ்சவர்ணேஸ்வரர். சுயம்பு லிங்கம். காலையில் ரத்ன லிங்கமாகவும், உச்சி வேளையில் ஸ்படிக லிங்கமாகவும், மாலையில் ஸ்வர்ண லிங்கமாகவும், இரவு நேரத்தில் வைர லிங்கமாகவும், அர்த்த ஜாம வேளையில் சித்திர லிங்கமாகவும் மாறுவதாக கூறப்படுகிறது. கருவறை சுவற்றின் வெளியே யானையின் மதத்தை கோழி அடக்கும் புடைப்பு சிற்பம் ஒன்று ஸ்தல வரலாற்றை விளக்கும் விதமாக அமைந்துள்ளது. அன்னை காந்திமதியம்மை உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். நாக லோகத்து நாக கன்னிகைகளால் வழிபடப்பட்ட அன்னையை சோழ மன்னன் கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்து பூஜித்ததாக கூறுவர். அழகிய கோஷ்ட மூர்த்தங்களை காணலாம். முகப்பு மண்டபத்தில் பிள்ளையார் மற்றும் முருகன் சந்நிதிகள் உள்ளன. தூண்களில் காணப்படும் சிற்பங்கள் அரிதானவை.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.